இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்களில், நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் 21 நாள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை, மே 3ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இருப்பினும் அதிக பாதிப்பு இல்லாத பகுதிகளில் ஏப்.,20 முதல் நிபந்தனையுடன் சில தளர்வுகள் அளிக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் கால தாமதத்தை தடுக்க, டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கடந்த மார்ச் 25ல் மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் வரும் இன்று (ஏப்.,20) முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் வழக்கம் போல் இயங்கும் எனவும், கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் நேற்று முன்தினம் மத்திய அரசு அறிவித்து, நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நள்ளிரவு முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் இயங்க துவங்கின. வாகனங்களிடம் டோல்கேட் கட்டணங்கள் வசூல் செய்யப்படுகின்றன.
No comments:
Post a Comment