Tuesday, April 7, 2020

மக்கள் ஒழுக்கம் என்றால் சிங்கப்பூர் தான்; முதல் நாள் ஊரடங்கு எப்படியிருந்தது?

'கொரோனா' அச்சுறுத்தல் காரணமாக, சிங்கப்பூரில், நேற்று முதல், ஒரு மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
lockdown,quarantine,curfew,singapore,coronavirus,covid19

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும், 'கொரோனா' வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, சமூக விலகலை கடைப்பிடிப்பது தான் ஒரே வழி. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில், சிங்கப்பூரில் நேற்று முதல், ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என, பிரதமர் லீ சியங் லூங் அறிவித்திருந்தார். அங்கு, தற்போது வரை 1,375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவை, முதல் நாளிலேயே, அங்குள்ள மக்கள் ஒழுக்கமாக பின்பற்றி அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர்.

நடமாட்டம் குறைவு:
சமூக விலகலை கடைப்பிடிக்க, குறைந்தது ஒரு மீட்டர் தொலைவை பின்பற்றுதல், அதிக மக்கள் கூடும் ஓட்டல்களில், இருக்கைகள் அகற்றப்படுதல் என, அனைத்து விதமான முன்னேற்பாடுகளும், மக்களே முன்வந்து பின்பற்றுகின்றனர்.

ராபிள்ஸ் பிளேஸில் உள்ள வங்கியில் பணிபுரியும் கெவின் கே என்பவர் கூறுகையில், ''சில வாரங்களுக்கு முன் இருந்த வழக்கமான கூட்டம், தற்போது குறைந்துள்ளது. சிலர் வீட்டில் இருந்தே வேலை செய்ய துவங்கியுள்ளனர். கண்களை மூடிக்கொண்டே சுற்றினாலும், யார் மீதும் மோத வாய்ப்பு குறைவு தான். அந்தளவிற்கு மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது,'' என்றார்.

இன்று முதல் பள்ளிகளும் மூடப்படும் என அறிவித்துள்ளதால், தற்போது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் பெற்றோர் கூட, வெளியே வரமாட்டார்கள். எனவே, ''ஊரடங்கின் தாக்கம் இன்று தான் உணரப்படும்,'' என மற்றொரு வங்கி ஊழியரான கென்னி சுவா கூறினார். ஆனால், அனைவரும் வீட்டிலேயே சமைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டதால், சந்தையில் இறைச்சி கடையில் வழக்கத்தை விட வர்த்தகம், சற்று விறுவிறுப்பாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சந்தைக்கு அருகிலுள்ள ஓட்டல்களில், அனைத்து இருக்கைகளும் அகற்றப்பட்டன. இதனால் சாப்பிட வந்தவர்கள் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இருக்கைகள் வைத்திருந்தால், சமூக விலகல் கடைப்பிடிப்பது சிரமம் என அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

வெறிச்சோடிய கடைகள்:
மீன் சூப் கடையின் உரிமையாளர் கூறுகையில், 'காலை முழுவதும் வாடிக்கையாளர்கள் வரவில்லை. எல்லோரும் வீட்டில் சமைக்கிறார்கள். இப்படியே ஒரு மாதத்துக்கு தொடர்ந்தால், நாங்கள் அவ்வளவு தான்' என்றார். நேற்று, சிங்கப்பூர் முழுவதும், பல்வேறு அரசு நிறுவனங்களை சேர்ந்த மொத்தம் 2,600 அதிகாரிகள், தொலைதூர தூதர்கள் மற்றும் அமலாக்க அதிகாரிகளாக நிறுத்தப்பட்டனர். ஷாப்பிங் மால்களில், பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆர்ச்சர்ட் சாலை ஒரு பேய் நகரமாக காட்சியளித்தது. எப்போதும் அதிகளவு இருக்கும் ஐஸ்கிரீம் வண்டிகள் கூட, அப்பகுதியில் காணப்படாத நிலையில், நடைபாதைகள் வெறிச்சோடின. மக்களின் உரையாடல், போக்குவரத்து நெரிசல் போன்ற வழக்கமான சலசலப்புகள் இன்றி காணப்பட்டன. நெக்ஸ் ஷாப்பிங் மால், மதிய உணவு நேரத்தில் வெறிச்சோடியது.

செரங்கூன் எம்.ஆர்.டி., நிலையம், வழக்கமாக வார நாட்களில், காலை 8:30 மணி முதல் காலை 9:00 மணி வரை நிரம்பி வழியும். ஆனால், நேற்று காலையில் இருந்து காலியாக இருந்தது. ரயில்கள் வந்தால் பெரும்பாலும், ஒரு நிமிடத்துக்குள் இருக்கைகள் நிரம்பிவிடும். ஆனால், பெரும்பாலான ரயில்களில் அனைவருக்கும் இருக்கைகள் கிடைத்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...