Sunday, April 19, 2020

கொய்யாப் பழத்தை மிளகுத் தூளில் தொட்டு சாப்பிட்டால். . .


சனிப்பிடித்தாலும் பிடிக்கலாம் இந்த சளி பிடிக்கக் கூடாது என்று வேடிக்கையாகவும் வேதனையாகவும் சொல்வார்கள்..
சளிப்பிடித்தால் கூடவே இந்த இருமல் தொல்லையும் பாடாய்படுத்தி எடுக்கும். எப்போது மூக்கை சிந்தி க்கொ ண்டும், இருமிக்கொண்டும் இருப்ப‍தால், பாதிப்பு நமக்கு மட்டு மல்ல‍, நமது அருகில் இருப்பவர்க ளுக்கும் பெருத்த‍ சங்கடத்தையும் ஒருவித அச்சத்தையும் உருவாக்கிவிடும். ஆகவே இந்த‌ இருமல் மற்றும் சளிப் பிரச்ச னையில் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் இதிலிருந்து விரைவாக‌ விடு பட அற்புதமான எளிய வைத்தியம்
முக்கால்வாசி பழுத்தும் கால் வாசி பழுக்கும் தருவாயில் இருக்கும் கொய்யா (Guava) பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நீங்கள் விரு ம்பியவாறு நான்காகவோ அல்ல‍து எட்டாகவோ வெட்டி துண்டு களாக எடுத்துக் கொள்ளுங்கள்.
சுத்த‍மான மிளகு (Pepper)-ஐ எடுத்து அதனை மிக்ஸியில் போட்டு தூளாக அரைத்து ஒரு பதார்த்த‍ தட்டில் வைத்துக் கொள்ள வே ண்டும். (எக்காரணம் கொண்டும் கடையில் விற்கும் ரெடிமேட் மிளகுத் தூளை பயன்படுத்த‍க் கூடாது)
அதன்பிறகு வெட்டிய கொய்யா துண்டுகளை எடுத்து, இந்த மிளகுத் தூளில் தொட்டு அதனை அப்ப‍டியே எடுத்து சாப்பிட வேண்டும். இதை ப்போலவே சாப்பிட்டு வந்தால், சளி (Cold) தொலைந்துபோகும். நுரையீரலில் (Lungs) சளி இருந்தாலும் அந்த‌ சளி வெளியேறும், இருமல் (Cough) பிரச்சனையில் இருந்தும் நல்ல தீர்வு கிடைக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...