Tuesday, May 12, 2020

வண்டி ஒரு நாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்ற பழமொழி இப்போது கண்முன் நடந்து வருகிறது.

இந்தியாவிற்கு எந்த விதத்தில் இழப்பு ஏற்படுத்துவது என்று காலம் முழுக்க சிந்தித்து செயல்படும் நாடு பாகிஸ்தான். இதன் விளைவுதான் காஷ்மீர் தீவிரவாதம் மற்றும் இந்தியாவிற்குள் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதம்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு, பார்லிமென்ட் தாக்குதல், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீதான பாகிஸ்தான் ராணுவ தாக்குதல், பாகிஸ்தான் பகுதியிலிருந்து எல்லையோர இந்திய கிராமங்களின் மீது நடத்தப்படும் பாகிஸ்தான் ராணுவத்தின் மார்டர், பீரங்கி தாக்குதல், விமான கடத்தல்கள்.... எல்லாம் இந்த வகைகள் தான்.
இந்தியா அழுது கொண்டு சர்வேத நாடுகள் மற்றும் ஐ.நா சபையில் பஞ்சாயத்து வைப்பதும், அவர்கள் ஆறுதலாக நான்கு வார்த்தைகள் பேசி அனுப்புவதும், பாகிஸ்தான் கை கொட்டி சிரிப்பதும் காலம் காலமாக நடக்கும் ஒன்று தான்.
இதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் வரை தான். 2014 ல் மோடி அரசு வந்ததும் தான் எல்லாம் தலைகீழாக மாறியது.
பாகிஸ்தானிய ரவுடித்தனத்திலிருந்து தப்பிக்க தற்காப்பு சிந்தனையில் இருந்து ரவுடித்தனம் செய்தால் பதிலுக்கு எப்படி உதைப்பது என்கிற இறங்கி அடிக்கும் சிந்தனைக்கு மாறியது.
அதன் விளைவு தான் ஊரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பதிலடியாக சர்ஜிகல் ஸ்டிரைக், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலக்கோட் தாக்குதல்.
-----------------
சரி இத்தனை நாளாக இருந்த இந்திய ராணுவம் தானே இப்போதும் இருக்கிறது. பிறகு ஏன் இதற்கு முன்பே இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கேட்கலாம்.
அந்த லட்சணத்தில் நாட்டை ஆண்டுள்ளது காங்கிரஸ் கம்பெனி. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கமிஷன் கொள்ளை தான். நாட்டை முடிந்த வரை சுரண்டுவது தான் அவர்கள் கொள்கை. இதில் நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட அவர்களுக்கு ஏது நேரம்... ?
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை படு கேவலமாக வைத்திருந்தனர். இதன் விளைவு இந்தியாவை உலக நாடுகள் மட்டுமல்ல சொறி நாய் கூட மதிப்பதில்லை.
இதைத்தான் பாகிஸ்தான் தந்திரமாக அதே சமயம் புத்திசாலித்தனமாகவும் பயன்படுத்திக் கொண்டது.
ஒரு இஸ்லாமிய நாடு என்ற முறையில் அரபு நாடுகளின் செல்வாக்கை பயன்படுத்தி உலக நாடுகளிடம் தன் வெளியுறவு கொள்கையை இந்தியாவை விட பலமாக வைத்திருந்தது. இந்தியாவிற்கு இருந்த ஒரே ஆதரவு ரஷ்யா மட்டுமே. கிட்டத்தட்ட அனாதை குழந்தை தான்.

பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஆதரவாக சீனா வரும். சீனா பாகிஸ்தான் பக்கம் நின்றால் ரஷ்யா நடுநிலை என்று ஒதுங்கிக் கொள்ளும். சக இஸ்லாமிய நாடு என்பதால் அரபு உலகமும் அதில் சேர்ந்து கொள்ளும். இத்தனை நாள் ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்த பாவத்திற்கு அனுபவிக்கட்டும் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கண்ணை மூடிக் கொள்ளும்.
இந்த ராணுவ மதிப்பீடுகளின் படிதான் காங்கிரஸ் இந்திய ராணுவத்தின் கைகளை கட்டிப் போட்டு வைத்திருந்தது. விளைவு பாகிஸ்தானின் இஸ்லாமிய பயங்கர வாதிகளால் தினம் தினம் இந்திய ராணுவ வீரர்களின் ரத்தம் ஆறாக ஓடியது.
மோடி பதவிக்கு வந்ததும் செய்த முதல் வேலை அயலுறவு கொள்கையை மாற்றி அமைத்தது மட்டுமல்லாமல் நாடு நாடாக சுற்றி வர்த்தகம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்கள் மூலம் அவர்களை நண்பர்களாக்கி நம் பக்கம் கொண்டு வந்தது தான்.
வெளியுறவு கொள்கைக்கும் வர்த்தக மற்றும் ராணுவ ஒப்பந்தங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இருக்கிறது... நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
உலகத்தின் எந்த நாடும் மற்ற நாட்டை இது உத்தமமான நல்ல நாடு என்பதால் நட்பு வைத்துக் கொள்வதில்லை. அனைத்து நாடுகளும் ஏதோ ஓர் ஆதாயத்திற்காகத்தான்
பிற நாடுகளை நட்பாகவும், நெருங்கிய நட்பு நாடாகவும் ஏற்றுக் கொள்கின்றன.
ரஷ்யா இந்தியாவை நேரு காலத்தில் இருந்து நட்பு நாடாக வைத்திருப்பதின் காரணம் ரஷ்யாவிடம் நாம் ஒவ்வொரு வருடமும் வாங்கும் பல்லாயிரம் கோடிகள் மதிப்புள்ள ராணுவ உபகரணங்கள், போர் விமானங்கள் தான்.
இந்த வர்த்தகம் அவர்கள் நாட்டில் பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது. அந்த நாட்டின் பொருளாதாரத்தில இது கணிசமான பகுதி.
இதே போல அரபு நாடுகளுக்கு மிக குறைந்த விலையில் அரிசி, கோதுமை, பால், காயகறிகள் போன்றவற்றை ஏற்றமதி செய்து பதிலுக்கு அவர்களிடமிருந்து எண்ணை வாங்குகிறோம்.
இது போல நாடுகளுக்கிடையாயான வர்த்தகத்தில் உள்ள முக்கியத்தும், அதில் கிடைக்கும் பலன் போன்றவைகளை வைத்து தான் வெளியுறவு கொள்கைகளை நமக்கான இடத்தை மற்ற நாடுகள் கொடுக்கின்றன.
இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவுடன் ஒப்பிட்டால் அமெரிக்கா ஒன்றுமே இல்லை என்ற நிலை தான் இருந்தது. மோடி அரசு அமைந்த பின் ஆயுத இறக்குமதி கொள்கையில் பெருமளவு மாற்றம் செய்யப்பட்டு அமெரிக்காவிற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மேலும் ராணுவ ஒப்பந்தங்களும் போடப்பட்டன.
விளைவு இன்று அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. நேட்டோ நாடுகளுக்கு இணையான அந்தஸ்து இந்தியாவிற்கு கொடுக்கப் பட்டுள்ளது.
---------------------
மறுபடியும் பாகிஸ்தான் பக்கம் வரலாம்.
இன்றைக்கு இந்தியா இறங்கி அடிக்கிறது என்றால் அது நமது வெளியுறவு கொள்கையை உலக நாடுகளுக்கு மோடி கொண்டு போய் சேர்த்த தைரியத்தில் தான்.
பாகிஸ்தானை ஓட விட்டு அடித்தாலும் கூட இந்தியாவிற்கு எதிராக அரபு நாடுகள் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாது.
காரணம், அரபு நாடுகளுடன் மோடி அரசு செய்து கொண்டுள்ள எண்ணை வர்த்தக ஒப்பந்தம். உலகில் சீனாவிற்கு அடுத்த படியாக அதிக கச்சா எண்ணை உபயோகிக்கும் நாடு இந்தியா. முன்பு போல மத ரீதியாக பாகிஸ்தானை ஆதரித்தால் எண்ணை கொடுக்க மாட்டோம் என்று மிரட்டி முடியாது.
காரணம் ஏற்கனவே இருந்த காங்கிரஸ் போல கமிஷனுக்காக எண்ணைக்கு அரபு நாடுகளை சார்ந்தே இந்தியா இல்லை. அரபு நாடுகளில் தீண்டத்தகாத நாடான இரான் பண்டமாற்று முறையில் எண்ணை கொடுக்க தயாராக உள்ளது. அதனுடனான உறவை மேம்படுத்தியதும் மோடி அரசு தான்.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருந்து எண்ணை கொண்டு வருவதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டு வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் இந்தியாவின் எஸ்ஸார் நிறுவனத்தை வாங்கி இந்தியாவில் எண்ணை வர்த்தகத்தில் ஈடுபட பதிமூன்று பில்லியன் டாலர்களை கொட்டியுள்ளது. அதன் மூலம் ரஷ்ய எண்ணை தடையில்லாமல் வரும்.
போதாக் குறைக்கு வியட்னாம் உடன் ஒப்பந்தம் போடப்பட்டு கடல் படுகையில் இந்திய துரப்பண நிறுவனம் ஓ.என்.ஜி.சி வேலைகளை செய்து வருகிறது.
இந்தியாவிற்கு எண்ணை சப்ளை செய்வதற்கு ஏகப்பட்ட நாடுகள் வரிசையில் நிற்கின்றன. இந்தியாவை முறைத்துக் கொண்டால் அரபு நாடுகள் தான் பிச்சை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து தங்கள்தலையில் தாங்களே மண்ணள்ளி கொட்டிக் கொள்ள எந்த அரபு நாடுகளும் தயாராக இல்லை என்பதே நிதர்சனம்.
---------------------
அடுத்ததாக பாகிஸ்தான் நம்பியிருப்பது ஆசியாவின் பேட்டை ரவுடி சீனாவை.
இந்தியாவை அச்சுறுத்தியும், மிரட்டியும் பார்ப்பதில் அவ்வளவு சந்தோசம் சீனாவிற்கு. வடகிழக்கு மாநிலங்களில் இந்திய பகுதிக்குள் ஊடுறுவி மிரட்டுவது சீனாவின் பொழுது போக்கு.
என்னை தொட்டால் என் அண்ணன் சீனா வருவான் என பாகிஸ்தான் சொல்வதும், என் தம்பியை தொட்டால் நான் வருவேன் என்று சீனாவும் டெர்ர் காட்டி வந்தனர். ராணுவத்தின் மூலம் தீ்ர்வு காண்பதில் காலம் கடந்து கொண்டே போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் இது வேலைக்காகாது. கொரோனா பிரச்சனையால் சீனா மீது பாய அமெரிக்கா தலைமையில் ஒரு பெரும் கூட்டமே தயார் நிலையில் உள்ளது. சீனா தன்னை தற்காத்துக் கொள்வது எப்படி என்கிற பரிதாப நிலையில் உள்ளது. இதில் பாகிஸ்தானிற்கு எப்படி உதவும்... ?
ஒரு வேளை சீனா வந்து விட்டால்... ? சீனா இந்தியாவிடம் மட்டுமல்ல தன்னுடைய அண்டை நாடுகள் அனைத்திலும் ஏழரையை இழுத்து வைத்துள்ளது. நிலப்பரப்பை ஒட்டிய நாடுகளோட சம்பந்தமே இல்லாமல் கடல் தாண்டிய நாடுகளான பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இந்தோனேசியா, மலேசியா, ஜப்பான், வியட்னாம் என எதிரிகள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளது.
இதில் விந்தை என்னவென்றால் நிலத்தகறாறு என்றால் கூட பரவாயில்லை தென்சீனக் கடல் என்ற முழு கடலே தனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறது.
சீனா யார் மீதாவது தாக்குதல் நடத்தினாலும் சரி, சீனா மீது வேறு யார் தாக்குதல் நடத்தினாலும் இதையே சாக்காக வைத்து கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்புகள் சீனா மீது பாய்ந்து கொத்து பரோட்டோ போட்டு விடுவார்கள்.
ரஷ்யாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்தியாவுடனான எண்ணை வியாபாரம் முக்கியமானதாக ரஷ்யா கருதுகிறது. சீனாவிற்கு ஆதரவளித்து அதை கெடுத்துக் கொள்ள ரஷ்யா விரும்பாது.
---------------------
பாகிஸ்தான் இப்போது தனிமைப் படுத்தப்பட்டு அனாதையாக நிற்கிறது. ஏதாவது ஒரு இந்திய நாய் இம்ரான்கான் மீது உச்சா அடித்தால் கூட அவரால் எதுவும் செய்ய முடியாத நிலை.
பாகிஸ்தான் ராணுவமே இம்ரான் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
போதாக்குறைக்கு பாகிஸ்தான் நாட்டின் கடன் அதன் கழுத்தை நெறிக்கின்றது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூட திணறி வருகின்றது. உச்ச கட்ட கேவலமாக பிரதமர் அலுவலகம் மின்சார கட்டணம் நாற்பது லட்சம் பணம் கட்டவில்லை என மின்சார துறை மின் இணைப்பை துண்டித்து பிரதமர் இம்ரான் இரண்டு வார காலம் மெழுகு வத்தி வெளிச்சத்தில் வேலை செய்ததாக தகவல்கள் வந்தன.
இப்படிப்பட்ட கேவலமான நிலையில் இருந்தும் கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி இந்தியாவிற்குள் தீவிரவாதிகளை தயாரித்து அனுப்புகின்றனர்.
எல்லாவற்றிற்கும் மொத்தமாக சேர்த்து ஆப்பு வைக்கத்தான் இப்போது இந்திய ராணுவம் தயார் நிலையில் எல்லையில் உள்ளது.
இப்போது பாகிஸ்தான் பதறிக் கொண்டு எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பிற்காக F 16, JF 17 போர் விமானங்களை அனுப்பி இடைவிடாமல் கண்காணித்து வருகிறது.
இதில் ஒரு பெரிய சுவாரஸ்யம் இந்த ரக போர் விமானங்கள் ஒவ்வொன்றும் ஒரு மணி நேரம் பறக்கவும், பறப்பிற்கு பிறகான பராமரிப்பிற்கும் ஆகும் செலவு பதினைந்து லட்சம். ஐந்து விமானங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் இடைவெளி விடாமல் கண்காணிக்க பறந்தால் ஒரு நாளைக்கு ஆகும் செலவு மட்டும் பதினெட்டு கோடிகள்.
பிரதமர் அலுவலக மின்சார கட்டணம் செலுத்தக் கூட வக்கற்றவர்கள் எப்படியோ கஷ்டப்பட்டு, எங்கேயோ கடன் வாங்கி ரோந்துப் பணி செய்கிறார்கள். முழு அளவிலான போர் வந்தால் இம்ரான்கானுக்கு ஜட்டி கூட மிஞ்சாது.
கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கலாம்.
சீனா கண்டிப்பாக வராது. வந்தால்...
இந்தியாவின் அண்டை நாடாக சீனா இருக்க இனி வாய்ப்பில்லை. அதற்கு பதில் இந்தியாவின் அண்டை நாடாக திபெத் இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...