தெரிந்து கொள்வோம் :
நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர்
முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார்.
எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர்.
நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார்.
நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.
இன்னும் சில சுவாரசியமான டிப்ஸ்...
இராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார்.
எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர்.
ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.
ஒரு காற்று நிரப்பப்பட்ட பலூனை எடுத்துக்கொள்வோம். உங்கள் இரண்டு கையால் அதை அழுத்தும் போது கன அளவு குறையும். மேலும் அழுத்தத்திற்கு உட்படுத்தினால் அது வெடிக்கும். ஆக அழுத்தம் அதிகரித்தால் கன அளவு குறையும். இது நீர் மூழ்கி கப்பலுக்கும் பொருந்தும். நீருக்குள் செல்ல செல்ல அழுத்தம் அதிகரிக்கும்.
கடலில் எதிரிகளுக்கு உண்மையான ராட்சனாக வலம் வருபவன் நீர் மூழ்கிக் கப்பல். நீர்மூழ்கி கப்பலால், அறிவியல் முறைகளை பயன்படுத்தி நீருக்கு உள்ளேயே இருந்து ஏவுகணைகளை தாக்கவும் முடியும். ஒரு வேளை ,சில அறிவியல் விதிகளை தெரியாமல் பயன்படுத்தினால், அதே அறிவியலால் அழிவு நிச்சயம்.
எந்த மாதிரியான விதி என்று பின் பார்ப்போம். அதற்கு முன் எப்படி நீருக்குள் மூழ்கிறது, வேலை செய்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.
எப்படி மிதக்கிறது:
தற்போது 6ம் வகுப்பில் படித்த ஆர்க்கிமிடிஸ் தத்துவத்திற்கு வருவோம். தண்ணீரில் ஒரு பொருள் தன் எடையை விட அதிக எடையுடைய நீரை வெளியேற்றினால் மட்டுமே அப்பொருள் நீரில் மிதக்கும். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான் கப்பல்கள் மிதக்கின்றன.
ஆகவே , ஒவ்வொரு நீர் மூழ்கி கப்பலுக்கும் Crash level point இருக்கும். அதற்கு மேல் அது பலூனை போல் சிதறி விடும்.
உதாரணமாக , Crash Level சுமார் 400 மீட்டர் ஆழம்வரை தான் உள்ளே செல்ல முடியும் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வேளை அதற்கு மேல் 500, 600 மீட்டர் சென்று விட்டால் சுமார் தோராயமாக 20000 டன் அழுத்தத்தை கொடுக்கும். அதாவது ஒரு முட்டை மீது ஒரு லாரி ஏறி நிற்பது போல் என்று நினைத்து பாருங்கள்.
கப்பலின் பயன்படுத்தக் கூடிய வெளிப்புற உலோகத்தை பொறுத்தே இது கணக்கிடப்படுகிறது .
எஃகு வை பயன்படுத்தினால் 4 Mpa வரையிலும்,Titanium பயன்பத்தினால் 10 mpa வரை தாங்க கூடும்.
ஆக, நீர்மூழ்கி கப்பலை பயன்படுத்துவதற்கு இது எவ்வளவு ஆழம் வரை செல்ல முடியும் என்பதை இது போன்ற அறிவியல் விதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தான் முடிவு செய்யப்படுகிறது
எனக்கு இந்த தகவலை படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது .
உங்களுக்கு....?
No comments:
Post a Comment