வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்
(அதிதிகள் வந்தால், விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்)
(எல்லோர் உள்ளத்தையும் ...ஏ.ஸி. யாக்குவது,பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி)
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
கடுமையான கோடை காலம்.
சில பக்தர்கள் வியர்க்க, விறுவிறுக்க பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். நல்ல தாகம். தரிசனம் செய்ய வேண்டும் என்ற பேராவலில் தாகத்தைப் பொருட்படுத்தாமல் வந்திருந்தார்கள்.
பெரியவா ஒரு சிஷ்யரிடம் அவர்களுக்குக் காசி வில்வப்பழ ரசம் கொடுக்கச் சொன்னார்கள். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்! பெரியவாளின் கருணையை எண்ணி மனம் குளிர்ந்தார்கள்.
உடனே பெரியவா, தனக்கு விசிறிக் கொண்டிருந்த சிஷ்யரைக் கூப்பிட்டு, அதே பனை விசிறியால் அந்த பக்தர்களுக்கும் விசிறச் சொன்னார்கள்.
திடுக்கிட்டுப் போன அவர்கள்,"அபசாரம்,அபசாரம்....பெரியவாளுக்கு உபயோகப்படுத்துகிற அதே விசிறியால், எங்களுக்கு விசிறக் கூடாது. நாங்கள் சாதாரண ஜனங்கள்"என்று ஒரு குரலாகப் பிரார்த்திக் கொண்டார்கள்.
பெரியவா சொன்னார்கள்; "எல்லோருடைய சரீரத்திலும் பகவான் தான் ஆத்மாவாக இருந்து கொண்டிருக்கிறார் விசிறிக்கு எல்லா சரீரமும் ஒன்றுதான்!"
உபநிடத வாக்கியம் போலிருந்த அந்த வார்த்தைகளைக் கேட்டு,பக்தர்கள் பரவசமடைந்தார்கள்.
பெரியவா தொடர்ந்து சொன்னார்கள்
"இப்போ எல்லா இடத்திலேயும், எலெக்ட்ரிக் ஃபேன், ஃபிரிஜ் ...இப்படி வந்துவிட்டது. அதனால அதிதிகளை உபசரிக்கிற முறை கூட மறந்துடுத்து!... விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்... இதெல்லாம் மறந்தே போச்சு! குழந்தைகளுக்குப் புரிய மாட்டேங்கறது. அதனால் தான் ஜூஸ் கொடுத்து விசிறச் சொன்னேன். இதைப் பார்க்கிற சில பேர்களாவது, நம்ம பண்பாட்டைச் செயல்படுத்துவா."
" வில்வ விருக்ஷம் ரொம்ப உத்கிருஷ்டமானது. வில்வ தளத்திலே ஸ்வர்ணம் இருக்கிறதாக வைத்ய சாஸ்திரம் சொல்றது.சிவ நிர்மால்ய வில்வதளம் தினமும் ஸ்வகரித்தால் தங்கபஸ்மம் சாப்பிட்ட மாதிரி உடம்பு பிரகாசிக்குமாம்!...
வில்வப்பழம் தலையிலே தேய்த்துக் குளிக்கணும். அவ்வளவு குளிர்ச்சி. கண்ணுக்கு ரொம்ப நல்லது.
வில்வப்பழம் தலையிலே தேய்த்துக் குளிக்கணும். அவ்வளவு குளிர்ச்சி. கண்ணுக்கு ரொம்ப நல்லது.
" இப்போ வில்வ மரமே அபூர்வமாகப் போயிடுத்து. சிவன் கோயில்களில் கூட கிழமாகிப் போய்விட்ட சில மரங்கள் தான் இருக்கு.வில்வக் கன்று வைத்து வளர்த்தால் ரொம்பப் புண்ணியம் - ஸ்ரீ வ்ருக்ஷம். அதனாலே த்ரவ்யாபிவிருத்தின்னு பிரசாரம் பண்ணினால் கூடத் தேவலை...."
பெரியவா பேசி முடிக்கிற சமயத்தில், ஒரு வேளாளப் பெண்மணி வந்தாள்.அவளும் களைத்திருந்தாள். வில்வப்பழ ரசமும், மோரும் கொடுக்கும்படி சிஷ்யரிடம் கூறினார்கள் பெரியவா.
வெளியே தகிக்கிற வெயில் தான்.
ஆனால் பெரியாவாளின் உள்ளுக்குள்ளே பனிமழையல்லவா, பொழிந்து கொண்டிருக்கிறது.
எல்லோர் உள்ளத்தையும்... ஏ.ஸி. யாக்குவது, பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி!.. .
ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர !
ஜெய ஜெய சங்கர !
No comments:
Post a Comment