Saturday, May 2, 2020

வெளிப்படும் அதிர்வுகளும் சொற்களும்...........

நம் இந்திய கலாசாரத்தின்படி வயதில் பெரியவர்களின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்குவது என்பது அவர்கலின் மீது நாம் வைத்திருக்கும் மரியாதையின் வெளிப்பாடு. இப்படி செய்வதைப் பற்றி ஒரு சிலர் மாற்றுக் கருத்துக்களும் விமர்சனங்களும் செய்தாலும் இன்னும் பெரும்பான்மையான இந்தியக் குடும்பங்களில் இந்த பழக்கங்கள் மாறவில்லை.
இந்தச் செயலுக்கு சில விஞ்ஞான அடிப்படைகளும் உள்ளன. நம் உடலின் அடித்தளம் கால்கள்தான். ஒருவர் நிற்கும்போது அவர்களின் முழு எடையும் தூங்கி நிற்பது அவரின் கால்கள்தான். நாம் குனிந்து பெரியவர்களின் காலைத் தொடும்போது நம்முடைய ஈகோ அடங்கும். அவர்களின் வயது ஞானம் அனுபவம் ஆகியவற்றை நாம் மதிக்கிறோம். நம் பணிவால் அவர்கள் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள். பொதுவாக பெற்றோர் வீட்டுப் பெரியோர் ஆசிரியர்கள் ஆன்மிக குருக்கள் எஜமானர்கள் வயதில் மூத்தோர்கல் உள்ளிட்டோர் காலில் விழுந்து வணங்குகிறோம். இவர்கள் நிறைய அனுபவங்களையும் அதனால் பெற்ற நல்லொழுக்கங்களையும் அறிவையும் அதனால் பெற்ற நல்லொழுக்கங்களையும் அறிவையும் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் அதிர்வுகளும் சொற்களும் அவர்களுடைய மனமார்ந்த ஆசீர்வாதமாக நமக்குக் கிடைக்கிறது. காலில் விழும் பிள்ளைகள் வலிமை புத்தி அரிவு மற்றும் புகழ் ஆகியவற்றில் ஓங்கி வளரவேண்டும் என்ற வாழ்த்துக்களோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். நீண்ட காலம் இந்தப் பூமியில் நடந்து பெற்ற ஞானத்தையும் அன்பான ஆசீர்வாதத்தையும் அவர்களின் கால்களைத் தொடுவதன் மூலம் நாம் பெறுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...