இதுதான் அன்பு என்று யாராலும் வரையறுத்துச் சொல்ல இயலாது...
அன்பு, பாசம், காதல், நட்பு என்று பல்வேறு பெயர்களில் நாம் பார்த்தாலும், எல்லாமே அன்பு என்பதைத்தான் மையப்படுத்துகிறது...
ஒரு மனிதன் தன் தாயையோ அல்லது உறவினர்களையோ நேசித்தால் "அது பாசம்" என்றாகிறது...
அதுவே தன் காதலியிடமோ அல்லது காதலனிடமோ அன்பாய் இருந்தால் அதை "காதல்" என்கிறோம்...
தன்னைச் சுற்றி உள்ளவர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ செலுத்தினால் அது "நட்பு" என்றாகி விடுகின்றது...
அன்பு என்ற உணர்வு, நம் உள்மனதிலிருந்து எழ வேண்டும்...
மகிழ்ச்சியை விரும்புவதும், மனிதனின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரே மருந்து அன்பு ஒன்றுதான்.. ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவதன் மூலம் நம் வாழ்க்கையும் பிரகாசமாகும்...
No comments:
Post a Comment