-------------------------------
இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் பிசியான காலகட்டம் அது ..ஊட்டியில் படப்பிடிப்பு ..சூட்டிங் துவங்கும் முதல்நாள் ரிலாக்ஸாக தனது உதவிஇயக்குனர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்க..
அதில் ஒரு உதவி இயக்குனர் மட்டும் மிஸ்ஸிங்...
எங்கடா அவனை காணோம்..?
ரூம்ல இருக்கான் சார்..
ரூமூலயா..? தனியா ஒக்காந்து அங்க என்னடா பண்ணீட்ருக்கான்..கூப்டுங்கயா அவன...!!
ஓடிச்சென்று அந்த உதவி இயக்குனர் அழைத்து வரப்பட...
ரூமுல தனியா ஒக்காந்து என்னடா பண்ணிட்ருக்குற...கத கித எதும் எழுதுறியா...?
இல்ல சார்..
அப்றமென்ன.. வந்து நீயும் கிரிக்கெட் ஆடவேண்டீதான..
அந்த உதவி இயக்குனரோ தயங்கியபடியே...
சார்.கிரிக்கெட் எனக்கு வெளையாட தெரியாது சார்...அதான்..
நிமிர்ந்து பார்த்து சிரித்த மணிவண்ணன் ..
என்றா..அப்ப டைரக்க்ஷன் மட்டும் என்ன ஒனக்கு குலத்தொழிலா...?
அய்யயோ..இல்ல சார்..
அப்றம்...? எல்லாம் போறபோக்குல கத்துக்குற வேண்டீதான்டா...வா..வந்து பால் போடு...!
மணிவண்ணணின் பதிலால் அந்த உதவி இயக்குனரின் கூச்சமும் பயமும் விலகி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.
டைரக்க்ஷன் மட்டும் என்ன ஒன்னோட குலத்தொழிலா..?
என்ற அந்த கேள்வியால்தான் எனது டைரக்க்ஷன் பயம் விலகி தனியாக படம் பண்ணக்கூடிய துணிச்சல் பிறந்தது..தேங்க்ஸ் டூ மை குரு...!
கிரிக்கெட் தெரியாது என்று ஒதுங்கி நின்ற அந்த சிஷ்யன்தான் பின்னாளில் கிராமத்து மண்மனம் மாறாமல் சென்டிமெண்ட் படமாக எடுத்து வெற்றி கண்ட இயக்குனர் ராசுமதுரவன்.
மணிவண்ணன் அவர்களின் கேள்வியால் டைரக்ஷன் பயம் போய் ஞானோதயம் அடைந்த மற்றொரு உதவி இயக்குனர்தான் இன்று வரை வெற்றிகரமான இயக்குனராக வலம் வரும் சுந்தர்.சி அவர்கள்.
அப்றம்... நமக்கு மட்டும் டைரக்ஷன் குலத்தொழிலா என்ன? அடிச்சு ஆட வேண்டீதான்...
No comments:
Post a Comment