Thursday, February 3, 2022

தொடர்வோம் இனிதாக பகிர்வோம் இதமாக..............

 கிட்டத்தட்ட பதினோராண்டுக்கும்

மேலாக தொடர்கின்றேன் ...
ஆயிரக்கணக்கான உறவுகள், நட்புகளின்
மனதில் இடம்பிடித்திருக்கிறேன்
பழைய கணக்கில் ...
நூற்றுக்கணக்கான உறவுகள்,நட்புகளின்
மனதில் இடம்பிடித்திருக்கிறேன்
இந்த புதிய கணக்கில்
அன்பால் நிலைத்திருக்கிறேன்
பண்பால் வளர்ந்திருக்கிறேன்
பக்குவத்தால் உணர்ந்திருக்கிறேன்
பாசத்தை விதைத்திருக்கிறேன்
நேசத்தை சுமந்திருக்கிறேன்
நேயத்தை தொடர்ந்திருக்கிறேன்
நேற்றிருப்பவர் இன்றில்லை
இன்றிருப்பவர் நாளையில்லை
இக் கூற்று வாழ்வில் நியதிக்கு
பொருந்திடச் சொல்லியே
உணர்ந்திடப்போய்
சமீப கால இம்முகநூல்
தளமதில் பலரது செயலதில்
கனகச்சித பொருத்தமாய்
நான்
கண்ணியம் தவறியதில்லை
வம்பை தந்ததில்லை
வசவை பொழிந்ததில்லை
ஊக்கம் மறந்ததில்லை
எனை அறிந்தோர்
எனை புரிந்தோர்
எனை உணர்ந்தோர்
எனை மறந்ததில்லை
எனை பிரிந்ததில்லை
நல்ல ரசிகனாக இருந்த
வெறும் கேள்விஞானம் கொண்ட
எனையும் எழுத தூண்டியே
எனையும் ஊக்குவித்தே
எனையும் கவிஞனாக
ஆக்க முயற்சிக்கும்
இதயங்கள் பலருண்டு
எனது எழுத்துகள் மேம்பட்ட
தக்க ஆலோசனைகள்
தகுந்த வழிகாட்டல்கள்
மிகுந்த அக்கறைகள்
செலுத்திடும்
நலம் விரும்பிகள் பலருண்டு
இவர்கள் போதும்
என் பயணம் தொடர
என் எழுத்தும் சிறக்க
தொடர்ந்து ஆதரவு தரும்
எனதன்பு உறவுகளே
என்நேச நட்புகளே
உங்கள் ஊக்க உற்சாக
வழிகாட்டல் ஆதரவுக்கு
இந்த கேள்வி
மனமார்ந்த நன்றிகள் கோடி புரிதலிலா அறிதலிலா
உணர்தலிலா பிரிததிலாய்
கடந்திட்ட அந்த சிலருக்கும்
எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்
இது தான் நான் ....
இப்படித் தான் எனது பயணம் ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...