Tuesday, February 1, 2022

*சிறிய உடற்பயிற்சியாவது செய்யுங்கள்...*

 உங்கள் முதுகில் உள்ள 33 எலும்புகளும் நம் தண்டுவடத்தைப் பாதுகாக்கின்றன.

இந்த எலும்புகளுக்கு இடையில் பஞ்சு போன்ற மிக மிருதுவான ஒரு பகுதி உள்ளது.
இதனை ஆங்கிலத்தில் Intervertebral Disc என்பர். இது பெரும்பாலும் தண்ணீராலான ஒரு பகுதி.
நீங்கள் தொடர்ந்து செய்யும் முழு நாள் பணியின் போது நம் உடலில் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்கி நம் தண்டுவடத்தைப் பாதுக்காகிறது.
வயதாக வயதாக Disc ல் உள்ள நீர்ச்சத்து குறைந்து வலுவிழக்கும் போது, நம் தண்டுவட நரம்புகள் எலும்புகளுக்கு இடையே அழுந்த ஆரம்பிக்கும்.
இதனால் கால் வலி, மறத்துப் போதல், தசைகள் பலவீனம் அடைதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இதனை மருத்துவர்கள் Disc Prolapse என்று அழைப்பர்.
உங்கள் உடலில் உள்ள 206 எலும்புகளில் உங்கள் தொடை எலும்பு மிகுந்த வலுமிக்கது.
இதை ஆங்கிலத்தில் femur என்று அழைப்பர். நீங்கள் சிரிக்க ஜைகோமேடிக் மேஜர் மற்றும் மைனர் என்ற இரண்டு முகத்தசைகள் உதவுகின்றன.
நீங்கள் சிரிக்கும் போது முகத்தில் உள்ள பெரும்பாலான தசைகள் இதன் இயக்கத்திற்கு உதவுதால் நீங்கள் சிரிப்பது கூட ஒரு நல்ல உடற்பயற்சியே.
இறுக்கமாக அணியும் காலணிகள் உங்களுக்குப் பிற்காலத்தில் பல்வேறு தொந்தரவுகளை இலவசமாக தந்துவிடும்.
எனவே உங்கள் பாத அளவுக்கேற்ற தகுந்த அளவு காலணிகளைத் தேர்வு செய்வதில் கவனமாயிருங்கள்.
தொடர்ந்து நின்று கொண்டு நீண்ட தூரம் பேருந்தில் பயணிக்கும் சூழ்நிலையில் இருந்தால் மிருதுவான காலனிகளை அணிவது மிக நன்று.
ஒரு மனித எலும்பு உடைந்த பின் அறுவை சிகிச்சையின் மூலமோ அல்லது மாவு கட்டின் மூலமோ சரி செய்தாலும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப சுமாராக ஆறு மாதங்களில் இருந்து இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்ளும் இதனை ஆங்கிலத்தில் remodeling என்று கூறுவர்.
இந்த காலகட்டத்தை நாம் செய்யும் உடற்பயிற்சிகள் மூலம் குறைத்துக் கொள்ள முடியும். (physiotherapy exercises). உங்கள் தொடை பகுதியில் உள்ள எலும்பு மிகவும் பலமான எலும்பாகும்.
தீக்காயங்கள் ஏதேனும் நேர்ந்து விட்டால், சிறியதோ பெரியதோ குழாய் நீரில் காயம்பட்ட இடத்தை நன்றாகக் கழுவுங்கள்.
மருத்துவரை அணுகுவது நல்லது. மிக சிறிய காயமாக இருப்பின் அதாவது முதல் நிலை தீக்காயமாக இருப்பின் சிவந்த இடத்தில மருத்துவர் கூறும் மருந்துகளை இடலாம்.
இரண்டாம் நிலை காயம் இதனை தமிழில் கொப்புளம் என்பார்கள் ஆங்கிலத்தில் இதனை (blister) என்பார்கள், நீர் தேங்கிய கொப்புளங்கள் இதனை முடிந்த வரை உடைப்பதை தவிர்க்கவும்.
இதனை நீங்கள் உடைப்பதால் காற்றில் உள்ள கிருமிகள் உள்ளே செல்லலாம்.
தினமும் 10000 அடிகள் (steps) நடக்கும் படி உங்கள் வேலைப் பளு உள்ளது என்றால் உங்களுக்கு வேறு எந்த உடற் பயிற்சியும் தேவையில்லை.
அதாவது மருத்துவர்கள் கூறும் எளிய வழி தினமும் 10000 அடிகள் நடப்பது நல்லது என்று. இது நீங்கள் சாப்பிடும் அதிகப்படியான கொழுப்புகளைக் கரைத்து உங்கள் இயக்கத்தை வலுப்படுத்தும்.
மேலும், நோய்களில் இருந்து உங்களைக் காக்கும். இது ஒரு எளிய வழி முயன்று பாருங்கள், பயன் உங்களுக்கே உங்களுக்கானது.
சுமார் பத்து கோடி மக்களுக்கு மேல் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனை ஆங்கிலத்தில் non communicable disease என்று வகைபடுத்துவர்.
உடம்பில் உள்ள கணையத்தில் உள்ள லோங்கார்கான் செல்கள் உற்பத்தி செய்யும் இன்சுலின் நம் உடம்பில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.
அளவுக்கு மீறிய கார்போஹைட்ரேட் உள்ள உணவுப் பதார்த்தங்களை உண்பதால் இந்த இன்சுலின் உற்பத்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கி முடிவில் நின்று போய் விடுகிறது. இதனை நோய் என்பதை விட குறைபாடு என்பதே சிறந்தது.
எல்லாக் குறைபாடுகளையும் நம்மால் சரிசெய்ய முடியும், தகுந்த உடற்பயிற்சி, அளவான உணவுகள் அதாவது உங்கள் நாக்கு எந்த பதார்த்தத்தைக் கண்டு எச்சில் அதிகமாக சுரக்கிறதே அது உங்களுக்கு கேடு.
உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளையும் இது பாதிப்பதால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
குறைந்தது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் குறைந்தது அரைமணி நேரமாவது உடற்பயற்சி செய்யுங்கள்.
வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...