Tuesday, February 1, 2022

தி.மு.க., உட்கட்சி மோதல்; மாவட்ட செயலர் மீது தாக்குதல்.

 உள்ளாட்சி தேர்தலில் சீட் வழங்குவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலர் வழக்கறிஞர் சிவபத்மநாதன் மீது தாக்குதல் நடந்தது.

 தி.மு.க., உட்கட்சி மோதல்; மாவட்ட செயலர் மீது தாக்குதல்

சிவபத்மநாதன் சங்கரன்கோவிலை சேர்ந்த சிலருக்கு நகராட்சி தேர்தலில் கவுன்சிலர் சீட் வழங்க இவர் பரிந்துரைக்கவில்லையாம். இதனால் ஆத்திரமுற்ற சிலர் மூன்று கார்களில் அவரை சந்திக்க தென்காசி வந்தனர். தென்காசி--ராஜபாளையம் ரோட்டில் இ.விலக்கு என்னுமிடத்தில் டீக்கடையில் கட்சியினருடன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த சங்கரன்கோவில் கும்பல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினர்.

அவரது கார் கண்ணாடியை உடைத்தனர். பின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி விட்டனர்.சிவபத்மநாதன் ஆதரவாளர் சுரேஷ் என்ற கண்ணன் இலத்துார் போலீசில் புகார் செய்தார். சங்கரன்கோவிலை சேர்ந்த தி.மு.க., பிரமுகர்கள் ராஜதுரை, ராசையா அவரது மனைவி அண்ணாமலை மற்றும் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...