Friday, May 19, 2017

அடித்தார் அந்தர் பல்டி...!



போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். நான் அரசிலுக்கு வருவதை பலர் விமர்சிக்கின்றனர். இந்த விமர்சனங்கள் அனைத்தும் செடி வளர போடப்படும் உரம், மண்ணாகத்தான் பார்க்கிறேன். நம்மை எதிர்த்த நான் வளர சிலர் உதவிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கென்று தனிப்பட்ட கடமைகள், வேலைகள் தொழில் உள்ளது. உங்களுக்கும் குடும்பம் பொறுப்புக்கள் உள்ளன. அதனால் பொறுமையாக இருங்கள். போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள். - நடிகர் ரஜினிகாந்த்
*** போர் வரும்போது பார்த்துக் கொள்வோம் என்று சொல்வது மனோ தத்துவ ரீதியில் இவரால் வெற்றி பெற முடியாது என்றுதான் தெளிவாக சொல்கிறது. வெற்றி வீரன் யுத்தத்தை தேடி செல்வான். ஏன். அவனே கூட யுத்தத்திற்கு மூல காரணமாக இருப்பான். தானா வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என சோம்பி இருக்க மாட்டான். இவரது பேச்சில் எப்போதுமே முதிர்ச்சி இருந்தது கிடையாது. நடக்கும் போது எல்லாம் நடக்கட்டும் என்ற சாதாரண எண்ணமே இவர் மனதில் இருக்கிறது. தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பார்கள். ஒவ்வொரு தோல்வியிலும் மனது உறுதிப்பட வேண்டும். தன்னை மேலும், மேலும் திடப்படுத்தி வெற்றியே இலக்கு என்று இருக்க வேண்டும். துவக்கத்திலேயே ஜகா வாங்கக் கூடாது. அரசியலில் தைரியமாக இறங்க வேண்டும். அல்லது அரசியல் பேச்சை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் உங்களது படம் ரீலீசாகும் போது அரசியலுக்கு வரப்போவதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி மக்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் குழப்ப வேண்டாம் ****

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...