நேற்று வெளியான 10 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன. மதிப்பெண்கள் சரியான முறையில் அளிக்கப்பட்டதா? இல்லை ஏனோதானோ என்று கொடுக்கப்பட்டதா?
100க்கு 100 மதிப்பெண் எடுக்க முழு வாய்ப்புமுள்ள கணக்கு பாடத்தில் 13759 பேர் மட்டுமே 100 எடுத்துள்ளனர். அதே வேளையில் அறிவியல் மற்றும் சமூகவியலில் கணக்கை விட அதிகமான பேர் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இது எப்படி சாத்தியம்?
ஃபார்முலாக்களை அடிப்படையாகக் கொண்ட கணக்கில் விடை வேறாக இருக்க வாய்ப்பில்லை. 100 க்கு 100 எடுத்த அனைவரும் ஒரே மாதிரிதான் பதிலளித்திருக்க வேண்டும் / முடியும்.
ஆனால் புரிதலை அடிப்படையாகக் கொண்ட அறிவியல், சமூகவியலில் அனைவரும் ஒரேமாதிரியான பதிலை அளிக்க வாய்ப்பே இல்லை. மாணவனின் புரிதலை மதிப்பீடு செய்வதற்குப் பதிலாக மனப்பாடம் செய்யும் திறனுக்கு மட்டும் மதிப்பெண் அளிக்கப்படுகிறதா?
மொழிப்பாடமான தமிழில் 100 எப்படி சாத்தியம்? அப்படியென்றால் இவர்களுக்கு மொழி ஆளுமை சிறந்ததாக இருக்கிறது என்று பொருளா? இவர்களில் எத்தனை பேர்களால் சுயமாக ஒரு கட்டுரையோ, கவிதையோ எழுத முடியும்? ஆங்கில கலப்பில்லாமல் 2 நிமிடம் தூய தமிழில் பேசக்கூடாத நிலையில் இருக்கும் நிலையில்
தமிழில் 100 க்கு 100 என்பது கேலிக்கூத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோமா?
தமிழில் 100 க்கு 100 என்பது கேலிக்கூத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளுகிறோமா?
No comments:
Post a Comment