1968-ம் ஆண்டு, வார இதழ் ஒன்றுக்கு அம்மா அளித்த பேட்டியில், `உங்களிடம் உள்ள கெட்ட குணம் எது?' என்ற கேள்விக்கு தயக்கமே இன்றி, இப்படி பதில் சொன்னார் -
“என் முன்கோபம். அதைக் கட்டுப்படுத்த நினைக்கிறேன்... முடியவில்லை. எனக்குப் பிடிக்காத விதத்தில் நடந்துகொள்கிறவர்களை என்னால் மன்னிக்க முடியவில்லை.
பொய் பேசுபவர்கள், எனக்கு விரோதமாக நடந்துகொள்கிறவர்கள் மீது பெரும் கோபம் வருகிறது. வருங்காலத்தில் அதை கட்டுப்படுத்த நினைக்கிறேன்.”
மனதில் பட்டதை பளிச்சென கூறும் துணிச்சல் எப்போதும் அம்மாவுக்கு உண்டு!
உங்களை கர்வம் பிடித்தவர் என சொல்கிறார்களே?' என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் இன்னும் ஆச்சர்யம்.
“பெரிய கம்பெனி படங் களில் பெரும்பாலும் பெரிய கதாநாயகர்கள் தான் நடிப்பார் கள். அந்தப் படங்களில் அவர்களின் சர்வாதிகாரம் கொடி கட்டிப் பறக்கும். அவர்களை முகஸ்துதி செய்து நடக்க வேண்டும். எனக்கோ, மற்றவர் முன் கை கட்டி அடங்கி நடக்கும் இயல்பு ஒருபோதும் கிடையாது.
எனக்கென ஒரு தனித்தன்மை இருக் கிறது. பிடித்தவர்களுடன்தான் பேசுவேன். பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவேன். நான் உண்டு, என் வேலை உண்டு என்று ரிசர்வ்டாக இருப்பேன். இதனால் என்னைக் கர்வம் பிடித்தவள் என்பார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை!”
இந்தப் பேட்டி, அம்மா திரையுலகில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் அளித் தது. இப்படிப் பேசுவது தனது திரையுலக வாழ்க்கையைப் பாதிக்கும் என்ற கவலையெல்லாம் அவருக்கு இல்லை. தன் திறமை யின் மீது நம்பிக்கையும், எவரை யும் எதிர்கொள்ளும் துணிச்சலும் அவருக்கு உண்டு!
No comments:
Post a Comment