1992 ஜுன் 27,28,29 மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடக்கும் என்று ஜெயலலிதா அறிவித்தார். மதுரையில் சர்க்கியூட் ஹவுஸில் ஜெயலலிதா, சசிகலா தங்குவதற்காக தனி அறைகள் உருவாக்கப்பட்டன. அந்த அறைகளின் கட்டமைப்பு, ஒருமுறை அல்ல... இருமுறை அல்ல... 27 முறை மாற்றி அமைக்கப்பட்டது. மதுரை, தேனி, திண்டுக்கல்லில் இருந்த சீஃப் இன்ஜினீயர்கள் எல்லாம் மதுரையில் மாநாடு நடைபெறும் ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் குவிக்கப்பட்டனர். ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ‘ஸ்பார்டெக்ஸ்’ டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. தமுக்கத்தில் அமைக்கப்பட்ட மாநாட்டு மேடையின் முகப்பில் மழை பெய்தால் தண்ணீர் உள்ளே வடிந்துவிடாமல் இருக்க, தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக ‘பைபர் ஸ்பான்ஞ்’ கூரைகள் வேயப்பட்டன. மேடையிலும் டைல்ஸ்கள் பதிக்கப்பட்டன. மேடையில் இருந்து ஜெயலலிதாவின் ரெஸ்ட் ரூம் செல்லும் பாதையில், பாலீஸ் செய்யப்பட்ட கடப்பா கற்கள் பதிக்கப்பட்டன. ஜெயலலிதா தங்கப்போகும் அறைக்கு ரத்தினக் கம்பளங்கள் கொண்டு வரப்பட்டு விரிக்கப்பட்டன அதற்குள்ளேயே மேக்கப்-ரூம், டிரெஸ்ஸிங் ரூம், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த டிஸ்கஷன் ரூம் அமைக்கப்பட்டது. மன்னார்குடியில் இருந்து சமையலுக்கு தனி சமையல்காரர்கள் இறக்கப்பட்டனர்.
ஜெயலலிதாவுக்காக பல லட்சங்களைக் கொட்டி, பார்த்து பார்த்து இழைக்கப்பட்ட அந்த அறையில்... 27 முறை மாற்றி அமைக்கப்பட்ட அந்த அறையில் ஜெயலலிதா தங்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
அந்த மாநாடுதான் அடுத்தடுத்த தமிழகத்தில் ஜெயலலிதா-சசிகலா கூட்டணி தமிழகத்தில் நடத்தப்போகும் ஆடம்பரங்களுக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

No comments:
Post a Comment