நீங்கள் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களை விட, நீங்கள் சாக வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றால், நீ மிகவும் *நேர்மையானவன்* என்று அர்த்தம்..
உன்னை நல்லவன் என்பவர்களை விட, கெட்டவன் என்பவர்கள் அதிகமாக உன்னை சுற்றி இருந்தால், நீ *மிகவும் உத்தமன் நல்லவன்* என்று அர்த்தம்..
ஏனென்றால்
யார், யாரையும் போற்றவே தயாராக இல்லை..
இன்றைய உலகில்,
தூற்றவே முதலில் நிற்கிறார்கள்..
இன்றைய உலகில்,
தூற்றவே முதலில் நிற்கிறார்கள்..
யார், யாரையும் பாரட்டவே தயாராக இல்லை..
*அனைவரும் அடுத்தவரை குறை சொல்லவே* முதலில் நிற்கிறார்கள்..
என்னையும் சேர்த்தே சொல்கிறேன்... அடியேனும் மனித இனம் தான்...
மனித மனம் பாராட்டிற்காகவே ஏங்குகிறது...
*மாமியாரை மருமகள் பாராட்டினால் அங்கே மிஞ்சுவது தாய்மை* மட்டுமே..
*மனைவியை கணவன் பாராட்டினால் மிஞ்சுவது உண்மையான காதல்* மட்டுமே..
*மகனை அப்பன் பாராட்டினால் மிஞ்சுவது நட்பு* மட்டுமே..
*நண்பனை நாம் பாராட்டினால் கிடைப்பது ஆழமான தோழமை* மட்டுமே..
*கடவுளை மனிதன் பாராட்டினால் மிஞ்சவது நிலையான மன அமைதியே..*
பாராட்டிற்காகவே ஏங்குகிறது உலகம்..
பாராட்டினால் தான் என்ன?
காசா பணமா..
*ஒரு அன்பான வார்த்தை ஆயிரம் வலியையும் போக்கும்..*
காலையில் மனைவி கொடுக்கும் தேனீரில் சர்க்கரை கொஞ்சம் குறைந்தால், திட்டித் தீர்க்காமல், தேனீர் நன்றாக இருந்தது என்று பாராட்டுங்கள்..
அதே தேனீரை நீங்கள் வெளியில் போன பிறகு, அருந்தும் உங்கள் மனைவி உங்களின் பொய்யான பாராட்டை நினைத்து நினைத்து, உங்கள் பெருந்தன்மையை நினைத்துப் பார்த்து, *உங்கள் மீது அளவில்லா பாசத்தையும், காதலையும் வெளிப்படுத்துவாள்...*
உனக்குத் திருமணம் செய்யும் போது, மாமியார் வீட்டில் பெண் பார்க்கும் போது, வரதட்சனை வாங்குவதிலேயே குறியாக இல்லாமல், உங்கள் மனைவிக்கு, அனைவரையும் வைத்துக் கொண்டு ஒரு சத்தியம் செய்யுங்கள்..
*என் உயிர் உள்ளவரை உன்னை மட்டும் இல்லாமல், உன் அப்பா, அம்மாவையும் என் தாய், தந்தை போல பார்த்துக் கொள்வேன் என்று சத்தியம் அந்த பெண்ணிடம் செய்யுங்கள் அதை பின்பற்றவும் செய்யுங்கள்..*
*என் உயிர் உள்ளவரை உன்னை மட்டும் இல்லாமல், உன் அப்பா, அம்மாவையும் என் தாய், தந்தை போல பார்த்துக் கொள்வேன் என்று சத்தியம் அந்த பெண்ணிடம் செய்யுங்கள் அதை பின்பற்றவும் செய்யுங்கள்..*
உன் மனைவி உன்னோடு போட்டிக்காவது, *அவர் மாமியார் மாமனாரை, தாய் தந்தை போல் பார்த்து கொள்வாள்..*
அந்த நொடி சத்தியம், அந்த குடும்பத்திற்கு உன் முலம் கிடைத்த பாராட்டு..
கிருஷ்ணர் சொன்ன வாழ்க்கை அன்பு வாழ்க்கை..
இயேசு நாதர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை அன்பு வாழ்க்கை..
புத்தர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கை அன்பு வாழ்க்கை..
அன்னை தெரசா வாழ்ந்து காட்டிய வாழ்க்கை அன்பு வாழ்க்கை..
மகாத்மா காந்தி வாழ்ந்து காட்டிய வாழ்க்கை அகிம்மை வாழ்க்கை...
அன்பு மட்டுமே விலையே இல்லாதது..
மதிப்பு இழக்காதது..
மதிப்பு இழக்காதது..
அன்பே தான் கடவுள்..
கடவுளே தான் அன்பு..
கடவுளே தான் அன்பு..
எவனாலும் அழிக்க முடியாதது..
*அன்பை விதைத்துப் பாருங்கள்.. அன்பையே அறுவடை செய்வீர்கள்..*
ஆனால்
*விலையில்லாத அன்பு என்பதால் என்னாவோ அதற்கு மதிப்பு இருப்பதில்லை..*
*அன்பை மனிதனிடம் காட்டலாம்... மனித உருவில் வாழும் மிருகத்திடம் காட்ட முடியாது..*
ஆள் பார்த்து, நிறம் பார்த்து, தகுதி பார்த்து, வயது பார்த்துப் பேசும் கேவலமான மனிதர்களிடமோ, இல்லை சொந்தகளிடமோ, உங்கள் மேன்மையான உண்மையான அன்பை விதைக்காதீர்கள்..
*உங்கள் தகுதியறிந்து, உங்களை நேசிப்பவர்கள், மதிப்பவர்களை மட்டுமே போற்றுங்கள்..*
நான் கற்ற பாடம் இதுவே..
உங்களை விட கீழ் நிலையில் இருப்பவர்கள், அனாதைகள். உன்அப்பா அம்மா, உன் மனைவி, மக்கள், உண்மையான நண்பர்கள் மற்றும் எதிரிகள், தன்னலமில்லா மரங்கள், விலங்குகள், கடைசியில் கடவுள் இவர்கள் தான் உன் அன்பை மதிப்பவர்கள்..
*அன்பு என்ற ஒற்றை விடயமே அகிலத்தில் எவ்வுளவு கிடைத்தாலும் திகட்டாத ஒன்று..*
*அன்பை நல்ல மனிதர்களிடம் விதைப்போம்..*
*அன்பை போற்றுவோம்..*
*ஆயுளை கூட்டுவோம்..*
நன்றியுடன்,
No comments:
Post a Comment