இந்த பஸ் வேலை நிறுத்தத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியே ஆகவேண்டும். அதிலும் நகர் புறங்களில் வேண்டுமென்றே நாளைய வேலை நிறுத்தத்திற்கு இன்றே ஈடுபட்ட அந்த ஓட்டுநர்களை உடனடி வேலை நீக்கம் செய்திட வேண்டும்.
மக்களின் நலன் கருதி அதனை அரசாங்கம் உடனே செய்தகாவேண்டும். கோர்ட்டிற்கு சென்று அவர்கள் மீண்டும் பணிக்கு சேரட்டும்..அதுவரை அவர்கள் படுகின்ற துன்பங்களை இப்போது செய்த அடாத செயலுக்கு பதிலாக அனுபவிக்கவேண்டும்..
எப்போதுமே இந்த சி ஐ டி யூ சவுந்திரராஜன் போன்றோர் இதனை வைத்தே காலத்தை ஒட்டுகின்றார்கள்..வேலை நிறுத்தம் எதற்கு செய்கின்றோம் என்று கூட அறியாத தொழிலாளர்களை கொண்ட சில தொழிற்சங்கங்கள் பின்னர் இதே தொழிற்சங்க தலைவர்களுக்கு தெண்டம் வேறு அழுவார்கள்..
நூறு ரூபாய் ஊதிய உயர்வுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பை சந்திப்பார்கள்..இது காலம் காலமாய் இந்த சவுந்திரராஜன் போன்றோரின் செயல்பாடுகள்..பல ஆண்டுகள் இதே நடக்கின்றது..
மனசாட்சி இல்லாத தொழிற்சங்க தலைவர்கள் இவர்கள்..இவர்களால் எத்தனையோ தொழிற்கூடங்கள் மூடப்பட்டன..பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை நிரந்தரமாக இழந்து இன்னமும் கோர்ட் வழக்கு என்று அழைக்கின்றார்கள்..
இந்த தொழிற்சங்க துரோகிகளை இன்னமும் தொழிலாளர்கள் நம்புவது அறிவீனம் என்பேன். எத்தனையோ வீடுகளில் இதனால் பல இன்னல்களை சந்திக்க இருக்கின்றார்கள்..படிப்பு வாடகை இப்படி பல்வேறு இன்னல்களை இன்று தொடங்கி பல ஆண்டுகள் சித்திரவதையாக அனுபவிக்கப்போகின்றார்கள்..
இந்த திமுக மற்றும் காங்கிரஸ் சி ஐ டி யூ போன்ற தலைவர்கள் போர்வையில் விளம்பரம் தேடுகின்றார்கள்..பல குடும்பங்களின் துயர் பற்றி கவலையில்லாமல்...
அரசாங்கம் தொழிற்சங்க கோரிக்கையை ஏற்று 750 கோடியில் ஆரம்பித்து தற்போது 1250 கோடி அளவுக்கு ரிட்டையர் அமவுண்ட் பி எப் போன்ற தொகைகளை திரும்ப கொடுக்க நிதி ஒதுக்கியாகிவிட்டது..மேலும் செப்டம்பர் மாதத்திற்குள் அணைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதாக உறுதி கூறியும் இவர்கள் ஆதாயம் தேடுகின்றார்கள்...
தேவையற்ற வேலை நிறுத்தத்தை நிச்சயம் இரும்புக்கரம் கொண்டு தீர்க்கவேண்டும்..
மக்களை துன்புறுத்தும் எந்த செயலுக்கும் மன்னிப்பே தரக்கூடாது..இங்கே அரசியல் தேவையில்லை..மக்கள் நலனே பிரதானமாக இருக்கவேண்டும்..
மக்கள் மத்தியில் போக்குவரத்து ஊழியர்கள் மீதான நல்ல எண்ணம் கிஞ்சித்தும் கிடையாத நிலையில் மேலும் மக்களின் வெறுப்பை சந்திக்கும் இவர்கள் சிந்திக்கணும்..
தேவையற்ற வேலை நிறுத்தம் இது..ஸ்டாலின் திடீர் என்று சில வாரங்களுக்கு முன்னர் இந்த கட்சிகளை அழைத்து அரவணைக்கும்போதே தெரியும்..இவர்களின் சதிவேலையை பற்றி..
வேலை நிறுத்தம் செய்வோர் இனி இந்த வேளைக்கு தேவையே இல்லை என்றாகி இவர்களை வேலை நீக்கம் செய்தால் மக்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்பார்கள்..
அரசு யோசிக்கவே கூடாது..இது அரசியல் சதிகாரர்கள் சதி ..!!
No comments:
Post a Comment