யார் உயர்ந்தவர் கடவுளா ? மனிதரா? என்று கேட்டால் எப்பொழுதும் கடவுளே உயர்ந்தவர் என்ற பதில் மட்டுமே வரும் கடவுளை விட மனிதன் உயர்ந்த கதை இது.
மகாபாரத போரிலே அர்ச்சுனனின் அம்புகளால் கர்ணனை கொல்ல முடியவில்லை.அவனது தானங்களின் புண்ணிய பலன் அவனை காத்தது .எனவே அவனை அம்புகளால் கொல்ல முடியாது என்று எண்ணிய கண்ணன்,மரணத்தையும் யாசிப்பது என்று முடிவு செய்து,ஏழை அந்தணன் வடிவில் வந்து, நீ செய்த புண்ணியங்கள் யாவையும் எனக்கு தா என்று யாசகம் கேட்டான்.வந்திருப்பது கண்ணன் என்பதை உணர்ந்த கர்ணன் இறைவனே நம்மிடம் இறைவனே யாசகம் கேட்கிறபோது மறுப்பது எப்படி என்று மகிழ்வுடன் நீ செய்த புன்னிய பலனை மட்டும் தான் கேட்டாய் நான் உமக்கு செய்த, செய்கிற,செய்ய போகிற யாவையும் உமக்கு அளிக்கிறேன்.என்று தாரை வார்த்தான் கர்ணன்.இதயத்தில் வழிந்த இரத்தத்தை உளங்கையில் வாரிய கர்ணன் தாரை வார்தான் கர்ணன்.தானம் வாங்கும் பொழுது கடவுள் கண்ணன் கை தாழ்ந்தது கொடுக்கும் பொழுது மனிதன் கர்ணன் கை உயர்ந்தது கொடுகிற எண்ணம் மனிதனை உயர்த்தியது
வாங்குகிற எண்ணம் கடவுளை தாழ்த்தியது. அதற்காக கடவுள் தாழ்ந்தவர் இல்லை.மனிதனை உயர்த்துவதற்காக கடவுள் தன்னை தாழ்ததவும் தயங்க மாட்டார் என்பதே நிர்தசனமான உண்மை.
வாங்குகிற எண்ணம் கடவுளை தாழ்த்தியது. அதற்காக கடவுள் தாழ்ந்தவர் இல்லை.மனிதனை உயர்த்துவதற்காக கடவுள் தன்னை தாழ்ததவும் தயங்க மாட்டார் என்பதே நிர்தசனமான உண்மை.
No comments:
Post a Comment