நீரின்றி நாமில்லை . . .
எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற வரிகளைப் படிக்கும்போது கண்க ளில் பெருகும்
பெருமித நீர்… எங்கெங்கு காணினும் வறட்சிய டா என்று படிக்கும்போது கண்ணீராய் வழிகிறது . மாதம் மும்மாரி பெய்ததை நெஞ்சம் நிமிர்த்தி சொன்ன நமக்கு, மாமாங்கத்திற் கொருமுறை மும்மாரி பெய்வதை சொல்ல வெட்கமாய் இருக் கிறது.
கருமேகங்கள் காணாமல்போனதற்கும்… நீர் நிலைகள் நிர்கதியானதற்கு ம் என்ன காரணம்? கடல்நீர் கழிவு நீரானதும் … ஏரியாவாக மாறியதும்… குளங்கள் குட்டையா னதும்… குட்டைகள் குப்பைகள்ஆனதும்… நதிக ள் நடந்த பாதை, நாம் பாதைகளானதும் யாரால் ? எவரால்? நம்மாலும் நம்மை ஆளுபவர்களாலு ந்தானே
இருந்தமரங்களை வெட்டிவிட்டு மரம் நடச்சொல்வதும்காடுகளை அழித்து நகரங்களாக்கிவிட்டு வனம் ஒருவரம் என்று உபதேசிப்பதும்… பெய்த மழைநீரை தேக்கி வை க்க திட்டமிடாமல், மழைநீர் சேமிக்க மக்களை வலியுறுத்துவதும்… கடவுள் கொடுத்ததை காப் பாற்றத் தெரியாத கயமைத்தனமன்றி வேறென் ன? இருப்பதை தொலைத்தது. இயற்கையின் இயலாமையல்ல… முழித்துக்கொண்டே தூங்குகின்ற நம்மின் முயலா மைதான்.
வறட்சியைவிரட்ட கரைவேட்டி கட்டிய நம் கழகங்கள் கடந்த 50 ஆண்டுகளில் எடுத்த முயற்சிகள் என்ன? காமராஜரின் காலத்தி ற்குபிறகு எத்தனை அணைகள் கட்டினோம்? எத்தனை ஏரிக ளை பராமரித்தோம்? எத்தனை குளங்களைத் தூர்வாரினோம்? பன்னாட்டு நிறுவனங்கள் தருகிற எச்சில் காசு கமிஷனுக்காக ஏரிகளை விற்றதும், விவசாய நிலங்களை வீடுகளாக்க அனும திகொடுத்ததும், ஊற்றெடுக்கும் ஆற்றுமணலை அள்ளிச்செல்ல சொல்லித் தந்ததும் இக்கழகங்கள்தான் என்பதை எவர் மறுக்க இயலும்?
மாறிமாறி ஆண்ட கழகங்களின் கவனக் குறைவால்தான் மாரி மாயமானது என்ப தை ஒத்துக் கொள்கிற நாம் இவர்களை மாற்றி மாற்றி மகுடம் சூட்டியதும் நாம் தான் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
அணிகளை இணைப்பதில் காட்டுகிறஆர்வத்தை இனியாகிலும் அரசு உள் ளூர் நதிகளை இணைப்பதில் காட்ட வேண்டும். நீர் ஆவியாவதைத் தடுக்க தர்மகோல் திட்டத்தை யோசிக்கிற அறி வு ஜீவிகள் நீர் நிலைகள் ஆழப்படுத்து வதற்கு யோசிக்கவேண்டும். மாற்று மாநிலங்களிடம் தண்ணீருக்காக மடிப் பிச்சை ஏந்துவதை விடுத்து, சந்திரபாபு நாயுடுவும், புட்டபர்த்தி சாய் பாபாவும் சாதித்ததை இங்கேயும் சாதிப்பதற்கு என்ன வழி என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கோஷ்டிகளாய்பிரிந்து கோஷம் எழுப்புவ தையும், விளம்பரம் பெறுவதற்காகவே போ ராடுவதையும் தவிர்த்து குளங்களைத் தூர் வார… விளை நிலங்கள் விற்பனையைத் தடுக்க… நாமும் விழிப்புணர்வோடு குழுக்கள் அமைத்து களத்தில் குதிக்க வேண்டும்.
நீயின்றி நானில்லை… நானின்றி நீயில்லை … என்று வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் நீர் (நீங்கள்) இன்றி நாமில்லை . . நாம் இன்றி நீர் இல்லை என்று உரத்த சிந்தித்தால் தேசம் செழிக்கும்.
No comments:
Post a Comment