பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இப்போது Star Sports Tamil என்று ஒரு புதிய அலைவரிசையைத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் அந்த சேதி.
ஏற்கனவே டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியோகிரபி உள்ளிட்ட பல சேனல்கள் தமிழில் வெளிவந்துகொண்டிருப்பதால், இந்தச் செய்தி நமக்கு பெரிதும் ஆச்சரியமாக இருந்திருக்காது.
ஆனால் நேற்று மேற்கு வங்கம், மகாராஷ்ட்டிரம், கர்நாடகாவில் இந்தச் செய்தி சமூக ஊடங்களில் குறிப்பாக பேசப்பட்டிருக்கிறது.
ஆனால் நேற்று மேற்கு வங்கம், மகாராஷ்ட்டிரம், கர்நாடகாவில் இந்தச் செய்தி சமூக ஊடங்களில் குறிப்பாக பேசப்பட்டிருக்கிறது.
"தமிழ்நாட்டைப் பார்! "
என்ன பேசுகிறார்கள்? தமிழ்நாடு இந்திக்கு அடிமையாகவில்லை என்பதால் அத்தனை சேனல்காரனும் தமிழ்நாட்டில் தமிழில் கடைவிரிக்கிறான். நாம் இந்திக்கு அடிமைப்பட்டதால் நமது மொழிகளில் இதுபோன்ற சர்வதேச சேனல்கள் வருவதில்லை!
-இதுதான் அவர்களின் உரையாடலின் சாரம்சம். தமிழ்நாட்டுக்கு தமிழ் மேற்கு வங்கம், மகாராஷ்ட்டிரம், கர்நாடகத்துக்கு என்றால் இந்தியாம்!.
இதனால்தான் இந்த மாநிலங்களில் இப்போது மொழிப்பிரச்சினை வெடிக்கிறது.
இங்கே என்னடாவென்றால் சரவணபவனில் தோசை வாங்க இந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரிகிறதுகள் சிலர்.
இங்கே என்னடாவென்றால் சரவணபவனில் தோசை வாங்க இந்தி கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொண்டு திரிகிறதுகள் சிலர்.
No comments:
Post a Comment