Monday, May 15, 2017

'#தில்லு'..



2002 என நினைக்கிறேன்.. தீபாவளி போனஸை 8% தருவதாக முதல்வர் ஜெ அரசு அறிவித்தது. ஆனால் 13% வேண்டும் என பிடிவாதம் பிடித்தன தொழிலாளர் சங்கங்கள்.. "8% மேல நயா பைசா கூட முடியாது.. போனஸ் என்பது நிறுவனத்தின் லாபத்தின் அடிப்படையில் தருவதுதான்.ஏற்கனவே படு நஷ்டத்தில் இயங்கி வரும் ட்ரான்ஸ்போர்ட்டில் அரசு தரும் 8% கூட மிக அதிகம்தான்.. " என தன் பாணியில் கூறி அடுத்த வேலையை பார்க்க போய்விட்டார் ஜெ. தமிழக தொழிற்சங்கங்கள் கம்யூனிஸ்ட் மற்றும் கருணாநிதி கட்டுப்பாட்டில் உள்ளவை ஆயிற்றே.. கொடி பிடித்தனர். ஸ்ட்ரைக் அறிவித்தனர்.. தமிழக போக்குவரத்தே முடங்கும் உச்ச நிலை..
என்ன செய்தார் ஜெ?? #எஸ்மா சட்டத்தை கையிலெடுத்து போராடும் தலைகள் முதல் வாலின் கேசங்கள் வரை 'உள்ளே' தள்ள அதிரடியாக உத்தரவிட்டார்.. இதான் ஜெ வின் #கெத்து.. தேடித்தேடி உள்ளே தள்ளப்பட்டனர் டுபாகூர் போராளிகள்.. அதே சமயம் அடுத்த விநாடியே பயிற்சி ஓட்டுநர்களாக காலத்தை கடத்திய எதிர்கால கனவு கண்டவர்களை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆக்கி தமிழகத்தில் ஒரு விநாடிகூட போக்குவரத்து #ஸ்தம்பிப்பதை தடுத்தார் முதல்வர் ஜெ.. 'புஸ்வானமாகி' போனது போராட்டம்.. இது ஜெ வின் '#தில்லு'.. ஸப்த நாடியும் ஒடுங்கிப்போய் சிறையில் களி தின்றார்கள் எதிர்க்கட்சியின் தூண்டுதலால் பேராசையில் போராடிய #தொழிலாளர்கள்.. தீபாவளி அன்றுகூட சிறையில்தான் இவங்க இருக்கனும் என தன் கோபத்தின் உச்சத்தை காட்டினார் ஜெ.. ஆயிரக்கணக்கான மன்னிப்புக் கடிதங்கள் ஜெ விற்கு பறந்தன.. இருப்பினும் தன் அரசின் மேலாண்மையை நிரூபிக்க நினைத்த ஜெ, தீபாவளி கடந்த பின்னேயே விடுவித்தார்.. அதற்கு பிறகு பயிற்சி ஓட்டுநர்களுக்கும் பணி தந்தார். இது கடந்த ஜெ வின் பொற்கால ஆட்சித்துளிதான்..
Image may contain: 1 person
பெட்ரோலிய நிறுவனங்கள் போல் மருத்துவம்,போக்குவரத்து,.மின்ஸாரம் போன்ற அத்யாவஸ்ய தேவைகளை முன்னாள் முதல்வர் #ஜெ தனியாரிடம் ஒப்புவிக்க நினைத்ததாக கடத ஆண்டு தகவல்கள் பரவின. ஜெ மட்டும் தற்போது இருந்திருந்தால் ஒரு பல்லியும் கத்தியிருக்காது.. நம் துரதிர்ஷ்டம் அவர் இல்லாததால் தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரன்தான்.. அது அய்யாக்கண்ணோ கொய்யாக்கண்ணோ.. யாரும் சவுண்டு என்ன.. மூச்சுகூட விட்டிருக்க மாட்டார்கள்.. காரணம் "இது ஜெ அரசு.. மக்களுக்கு விரோதமான போராட்டம் பத்தி பேசினாலே ஒததான் விழும் நமக்கு" என்பதை உணர்த்தி வெற்றியும் கண்டவர் ஜெ.. ஆனால் இனி?????? இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.. மக்கள்தான் பாவம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...