1. ஒரே அளவுளள 7, 8 காகிதங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
முதல் தாளில் 6 சமமான செங்குத்துக் கோடுகள் வரையவும்.
இன்னாரு தாளில் 7 கோடுகள் ஒரே அளவில் வரையவும்.
அதற்கடுத்த மூன்றாவது தாளில் 8 கோடுகள் வரையவும்.
இப்படியே எடுத்துக் கொண்ட தாள்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கோடுகளை அதிகமாக வரையவும்.
கோடுகளை காகிதத்தில் வரைந்ததும் ஏதாவது ஒரு காகிதத்தை எடுக்க வேண்டும்.
அதிலுள்ள கோடுகளை எண்ணிப் பார்க்கக் கூடாது.
எண்ணிப் பார்க்காமலே அதில் எத்தனை கோடுகள் உள்ளன என்று கூற வேண்டும்.
தொடக்கத்தில் தவறுகள் ஏற்படும்.
ஆனால் தொடர்ந்து பலமுறை செய்து வந்தால் சரியாகக் கூறும் ஆற்றல் வந்து விடும்.
இதனை விரைவாகச் செய்து பழகினால் பார்வை ஆற்றல் அதிகமாகும்.
2. நாம் நடந்து செல்லும் போது கண்ணிலே தென்படும் வீட்டில் எத்தனை சன்னல்கள் உள்ளன என்பதை எண்ணிப் பார்க்காமல் கூறவேண்டும்.
ஒரு நூல் நிலைய அலமாரியைப் பார்த்து, அதில் எவ்வளவு நூல் இருக்கும் என்று கூற வேண்டும்.
பின்னர் கூறியது சரிதானா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இது போன்ற பயிற்சிகளைச் செய்து பழகினால் பார்வையின் ஆற்றல் வளரும்.
இது போன்ற பயிற்சிகளைச் செய்து பழகினால் பார்வையின் ஆற்றல் வளரும்.
3 . அடுத்தபடியாக, ஒரு பெரிய கடையில் விளம்பரத்திற்குக் கடைக்கு வெளியே கண்ணாடி பீரோவில் வைக்கப்பட்டுள்ள பொருள்களைப் பார்க்க வேண்டும்.
அப்பொருள்களில் அவற்றின் விலைகளும் குறிக்கப்பட்டிருந்தால் மிகவும் நல்லதும்
அங்கு வைக்கப்பட்டுள்ள பொருள்களை நன்றாகப் பார்த்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதில் ஏதாவது புதுமையாக இருந்தால் அதனைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட வேண்டும்.
பின்னர் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட வேண்டும்.
எட்டி நின்று, பார்த்த பொருள்களின் பெயர்களையெல்லாம் எழுத வேண்டும்.
அப்பொருள்களின் விலைகளையும் குறிப்பிட வேண்டும்.
அப்பொருள்களின் விலைகளையும் குறிப்பிட வேண்டும்.
எழுதி முடித்ததும் மீண்டும் கண்ணாடி பீரோவுக்கு அருகில் வரவேண்டும்.
நீங்கள் எழுதிய பட்டியலுடன் அங்குள்ள பொருள்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
எந்தெந்தப் பொருள்கள் எழுதாமல் விடப்பட்டுள்ளன என்பதைக் காண வேண்டும்.
ஆனால் விடப்பட்ட பொருள்களின் பெயர்களை உடனே எழுதக் கூடாது.
நன்றாகக் கவனித்துவிட்டு,
மீண்டும் அங்கிருந்து விலகி வரவேண்டும்.
மீண்டும் அங்கிருந்து விலகி வரவேண்டும்.
வந்த பிறகு எழுதாமல் விட்டவற்றை மீண்டும் எழுத வேண்டும்.
மீண்டும் அங்கே சென்று ஒப்பிட வேண்டும்.
மீண்டும் அங்கே சென்று ஒப்பிட வேண்டும்.
பட்டியலில் எவ்விதத் தவறும் இல்லாமல் எல்லாவற்றையும் சரியாக எழுதும் வரையில் இவ்வாறு செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இப்படி விளம்பர சன்னல்களை அடிக்கடி கவனித்துக் கண்களுக்குப் பயிற்சி
தரவேண்டும்.
தரவேண்டும்.
பல கடைகளுக்குச் சென்று இவ்வாறு செய்ய வேண்டும்.
தொடக்கத்தில் சரியாக எழுதி
இருக்கமாட்டீர்கள்.
சில தவறுகளை செய்து இருப்பீர்கள்.
தொடக்கத்தில் சரியாக எழுதி
இருக்கமாட்டீர்கள்.
சில தவறுகளை செய்து இருப்பீர்கள்.
ஆனால் பயிற்சி காரணமாக விரைவில்
பார்த்தவற்றை சரியாக எழுதிவிட முடியும்.
பார்த்தவற்றை சரியாக எழுதிவிட முடியும்.
இதிலிருந்து கவனிக்கும் ஆற்றல்
வளர்ந்துவிட்டதை உணரலாம்.
வளர்ந்துவிட்டதை உணரலாம்.
No comments:
Post a Comment