எந்தெந்த கிழமைகளில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும்?
🌟 ஞாயிற்றுக்கிழமை அன்று கிரிவலம் சென்றால் நோய்கள் நீங்கும்.
🌟 திங்கட்கிழமை அன்று கிரிவலம் சென்றால் செய்த பாவங்கள் யாவும் விலகும் மற்றும் புண்ணியம் கிடைக்கும்.
🌟 செவ்வாய்க்கிழமை அன்று கிரிவலம் சென்றால் தீராக்கடன்கள் தீரும் மற்றும் தரித்திரம் அகன்று செல்வம் சேரும்.
🌟 புதன்கிழமை அன்று கிரிவலம் சென்றால், ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் மேன்மை பெறலாம்.
🌟 வியாழக்கிழமை அன்று கிரிவலம் சென்றால் புகழ் பெறுவார்கள்.
🌟 வெள்ளிக்கிழமை அன்று கிரிவலம் சென்றால் அயன, சயன, சுக போகங்கள், புத்திர பாக்கியம் மற்றும் செல்வச் செழிப்பு உண்டாகும்.
🌟 சனிக்கிழமை அன்று கிரிவலம் சென்றால் தன, தான்யம் பெருகும். வியாபாரம் பெருகி அளவில்லா இலாபம் கிடைக்கும்.
எந்த நேரத்தில் கிரிவலம் செல்ல வேண்டும்?
🌟 பிரம்ம முகூர்த்தத்தில் அண்ணாமலைக் கோவிலில் கிரிவலம் சென்றால் நாம் விரும்பும் சித்திகள் நம்மை வந்தடையும்.
🌟 மாலை நேரத்தில் கிரிவலம் சென்றால் தன, தான்யங்கள் பெருகும்.
🌟 நள்ளிரவில் கிரிவலம் சென்றால் வாழ்வில் சந்தோஷம் அனைத்தும் கிடைக்கும்.
No comments:
Post a Comment