Tuesday, April 17, 2018

சபரிமலை..

மிகவும் அதிகமாக பக்தர்கள் குவியும் புனித ஸ்தலங்களில் ஒன்றான சபரிமலையில், ஐயப்பனின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வருடந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் பக்தர்களின் எண்ணிக்கை பெருவாரியாக அதிகரித்து கொண்டே தான் உள்ளது. அதற்கு காரணம் அதிசயம் நிறைந்த இந்த தெய்வீக ஸ்தலத்தை நம்புபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே.
Image may contain: 1 person, smiling

இக்கோவிலில் உள்ள முக்கியமான இடம் அங்குள்ள 18 படிகள். ஐயப்பனைக் காண வேண்டுமென்றால் உங்கள் தலையில் இருமுடி சுமந்து கொண்டு, இந்த 18 படிகளில் ஏறி தான் செல்ல வேண்டும். கோவிலுக்கு செல்லும் முன், சில விரதங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த விரதம் பொதுவாக 41 நாட்களுக்கு நீடிக்கும்.
41 ஆவது நாளன்று, பக்தரின் தலையின் இருமுடி ஏந்தப்படும். இருமுடி என்பது விரதத்தின் முக்கியமான அங்கம். தங்கள் தலையில் இருமுடியை வைத்துக் கொண்டு தான் பக்தர்கள் 18 படிகளை ஏறிச்செல்ல முடியும். ஒவ்வொரு படியும் தனித்துவ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
அந்த 18 படிகளின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
முதல் ஐந்து படிகளை ஐம்புலன்கள், அதாவது கண்கள், மூக்கு, காதுகள், வாய் மற்றும் உணர்வு என அழைக்கின்றனர்.
Image may contain: outdoor
அடுத்த 8 படிகள் - அஷ்டரகஸ்
காமம், குரோதம், பேரார்வம், மோகம், கர்வம், ஆரோக்கியமற்ற போட்டி, பொறாமை மற்றும் தற்பெருமையை குறிப்பதே அஷ்டரகஸ்.
அடுத்த மூன்று படிகள் - மூன்று குணங்கள்
மனிதனுக்கு மனிதன் குணம் மாறுபடும். இவை அனைத்தும் சாத்வீகம், ரஜோ, தாமச குணங்கள் என்ற மூன்று வகைக்குள் அடங்கிவிடும்.
கடைசி இரண்டு படிகள் - வித்யா மற்றும் அவித்யா
கடைசி இரண்டு படிகளை வித்யா மற்றும் அவித்யா என அழைப்பார்கள். வித்யா என்றால் அறிவு. நான் என்ற அகங்காரத்தை (அவித்யா) விட்டு விட்டு, நாம் ஞானத்தை பெற வேண்டும். பின் மோட்சத்தைப் பெற வேண்டும்.
சபரிமலையில் உள்ள 18 படிகளில் ஏறிய பிறகு, ஒருவருக்கு வாழ்க்கையின் மீதான ஞானம் கிடைத்து, வாழ்க்கையின் நோக்கத்தை உணர்வார் என நம்பப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...