ஸ்மார்ட் போனுக்கு அடிமையான இந்தியர்கள்:
இந்தியர்கள் தங்களது இணைய நேரத்தை 90 சதவீதம் தங்களது ஸ்மார்ட் போனில் செலவழிக்கின்றனர் என்றும் அதிலும் வாட்ஸ்அப் பயன்பாட்டில் இந்தியர்கள் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013க்கு பிறகு இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. தற்போதைய நிலையில் இணைய வசதி குறைந்த விலையில் கிடைப்பதால் உணவு, உடை என அனைத்திற்கு இணையத்தை மக்கள் நாடுகின்றனர்.
இதுகுறித்து கடந்த ஆண்டு காம்ஸ்கோர் என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் இந்தியர்கள், கணினியில் நேரத்தை செலவிடுவதை விட ஸ்மார்ட்போனில்
அதிக நேரத்தை செலவிடுவது தெரியவந்துள்ளது. உலகளவில் ஸ்மார்ட் போனில் இணைய வசதியை அதிகம் பயன்படுத்துபவர்களில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. வாட்ஸ்அப்-ஐ மட்டும் 98 சதவிகிதம் பேர் பயன்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போனில், சமூக வலைத்தளங்கள், யூ டியூப், ஜிமெயில் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துத்தை இந்தியர்கள் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிற்கு அடுத்தடுத்த இடங்களில் இந்தோனேசியாவில் 87 சதவிகிதமும், மெக்ஸிகோவில் 80 சதவிகிதத்தினரும் எப்போதும் ஆன்லைனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment