சில பழமொழிகளை நாம் அன்றாடம் கேட்கிறோம், சிலதுக்கு சிறப்பாக பொருள் விளங்கும்,சிலதுக்கு பொருள் புரியாது.
ஒருசில பெரிய விசயத்தைக் கூட போற போக்குல உணர்த்துவதே பழமொழி ஆகும்.
இங்கு ஒரு பழமொழிக்கேத்த சோதிட யோகத்தையும்,மேலும் ஜாதகங்களில் எவ்விடங் களால் (வீடு) இவை சிறப்பு பெரும் என்பதையும் சுட்டிக்காட்டும் ஒரு எளிய சோதிட பதிவு.....
#விளக்கம் :வேங்கை மரமானது பல நாட்களும் தான் நின்றவிடத்தே நின்றிருந்தாலும் தான் பூத்தற்குரிய நல்ல நாளை அறிந்தே மலரும்.அதுபோல இறைவன்( மன்னர் )உள்ளம் மகிழும்படி வேண்டுயவற்றை செய்து வழிபாடு செய்து கொண்டாலும், செல்வம் ஒருவருக்குக் கைகூடும் போதுதான் வந்து சேரும்.
#இதற்காக_ஜாதக_யோகம் :
ஒருவரின் ஜனன ஜாதகத்தில்,ஜென்ம லக்னாதிபதியும்,சந்திர ராசி அதிபதியும்,சேர்ந்து லக்னத்திற்க்கோ,ராசிக்கோ கேந்திரத்தில் இருப்பது.இதற்க்கு #புஸ்கள யோகம் என்று பெயர்.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில்,ஜென்ம லக்னாதிபதியும்,சந்திர ராசி அதிபதியும்,சேர்ந்து லக்னத்திற்க்கோ,ராசிக்கோ கேந்திரத்தில் இருப்பது.இதற்க்கு #புஸ்கள யோகம் என்று பெயர்.
#யோக_பலன் : நல்ல செல்வ நிலையும்,ஆபர ணகீர்த்தியும்,செல்வ உயர்வும் உரிய காலத்தில் கிடைக்கும் என்பதே.
#பழமொழி :பன்னாரும் நின்ற விடத்தும் கணிவேங்கை
நன்னாளே நாடி மலர்தலால்-மன்னர்
உவப்ப வழிபட் டோழுகினும் செல்வம்
தொகற்பால போழ்தே தொகும்.
நன்னாளே நாடி மலர்தலால்-மன்னர்
உவப்ப வழிபட் டோழுகினும் செல்வம்
தொகற்பால போழ்தே தொகும்.
#ஸ்தான_பலம்:லக்னாதிபதி ஒன்பதாமிடத்தில் வலிமை பெற்று இருக்க,பத்தாமிடத்து அதிபதி, 12 லும்,12 ம் மிடத்து அதிபதி பாக்கியத்திலும் என்று பரிவர்த்னை பெற்று பலம் குற்றாமல் இருக்க தக்க காலத்தில் குபேரனைப் போல செவ்வ உயர்வை பெருவார்கள்.
#ஒரு_வரி_பழமொழி :செல்வம் தொகற்பால போழ்தே தொகும்.
#விதி_விலக்கு : மேற்கண்ட யோகம் அமைந்து இருந்தாலோ,லக்னம்,பத்தாமிடத்து அதிபதி, 12 மிடத்து அதிபதிகளை கவனித்து அதன் தசாபுத்திகள் நடைபெருமாயின் செல்வ செழிப்பை தரும் என்பதில் ஐயம் கொள்ள வேவையில்லை.
No comments:
Post a Comment