அடேய் தீமூக்கா அடிமைகளா, என்னங்கடா என்னமோ இல்லாதத சொன்ன மாதிரி பில்டப் குடுத்து கதற்றீங்க.
திருவாரூர் முத்துவேலர் – அஞ்சுகம் அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்த தட்சிணாமூர்த்தி, பிற்காலத்தில் தனக்குத் தானே மாற்றம் செய்து கொண்டு நாமகரணம் சூட்டிக் கொண்டப் பெயர் கருணாநிதி.
பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணத்தில் வாழ்க்கைத் துணைவி – பத்மாவதி. இவருக்கு முத்து என்ற பையன்.
திருமணமான சில ஆண்டுகளிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்த போனார் பத்மாவதி அம்மாள். இதன் பிறகு மீண்டும் பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணத்தால் கருணாநிதிக்கு மனைவியானார் தயாளு அம்மாள்.
அழகிரி, செல்வி, ஸ்டாலின்,தமிழரசு ஆகியோர் இவரின் வாரிசுகள்.
இந்நிலையில் தன்னுடன் நாடகத்தில் நடித்த ராசாத்தி அம்மாள் (இவருக்கும் இயர் பெயர் வேறு – தர்மாம்பாள்!) என்பவரை காந்தர்வ மணம் புரிந்து கொண்டாராம் கருணாநிதி. இந்தத் தம்பதியினருக்கு 1968-ம் ஆண்டு சென்னையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கனிமொழி என்று பெயர் சூட்டினர். இந்தத் திருமணம், குழந்தை பிறப்பு எல்லாம் வெளியுலகுக்கு தெரிந்தும், தெரியாமலும் ரகசியமாக வைக்கப்பட்டது.
இந்திய நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நம் நாட்டுக் குடிமகன் ஒரு தாரத்துக்கு மேல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது. எனவே, ’ராசாத்தி அம்மாள் என்பவர் யார்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.
நேரடியாக எந்தக் கேள்விக்குமே பதில் அளித்துப் பழக்கமே இருந்திருராத கருணாநிதி, “ராசாத்தி அம்மாள் எனது மகள் கனிமொழியின் தாயார்” என்று பதில் அளித்திருக்கிறார். நேரடியாக அது என் மனைவி.. இல்லையென்றால்.. வேறு மாதிரியான பதில் எல்லாம் என்றெல்லாம் சொன்னால் சட்டப்படி குற்றமாகி விடும் என்பதினால் இந்த மழுப்பல் பதில்.
சில,பல காலம் கழித்து எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அரசியலில் அஞ்ஞாதவாசம் எல்லாம் முடிந்த பிறகு ‘தில்லுதொர’க்கு தில்லு வந்தது. “தயாளு அம்மாள் எனது மனைவி. ராசாத்தி அம்மாள் எனது துணைவி’ என்று ஒரு அரிய விளக்கம் அளித்தார். தமிழ் அகராதிக்கு ஒரு புதிய அருஞ்சொற்பொருள் விளக்கம் கிடைத்தது.
அது நாள் வரை ‘துணைவி’ என்றாலும் ‘மனைவி’ என்றாலும் ஒன்றே தான் என்று நினைத்துக் கொண்டிருந்த கேடு கெட்ட தமிழர்களெல்லாம் தெளிவடைந்தார்கள். மனைவியை தப்பித்தவறி துணைவி என்று அழைத்தால், அது வேறு மாதிரி அர்த்தம் கற்பித்துக் கொள்ளப்படும் என்று அவசர அவசரமாக மனைவியை மனைவி என்று மட்டும் தான் அழைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இன்னமும் கொஞ்சம் ஆழமாக விசாரித்தால், ‘பத்மாவதி அம்மாள் – இல்லாள்’ என்று ஒரு புதிய விளக்கம் கிடைத்திருக்கக்கூடும்.
திருமதி கனிமொழி அம்மாள் பிறந்த தேதி குறித்து விக்கிப்பீடியா முதல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தகவலைத் தருகின்றன. ஜனவரி 1, 1968-ம் ஆண்டு தான் கனிமொழி அம்மாள் பிறந்தார் என்கிறது விக்கிப்பீடியா. அதிலும் கூட, தமிழ் விக்கிப்பீடியா ரொம்பத் தெளிவு. எதற்கு வம்பு என்று பிறந்த வருடத்தை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறது!
ஆனால் ஏனைய சில தளங்கள் ஜனவரி 5, 1968-ம் தேதி பிறந்தார் என்கிறது. சரி போகட்டும்… சென்னை மாநகராட்சியின் இணைய தளத்தில் பிறப்புச் சான்றிதழ்கள் பதியப்பட்டிருக்கின்றனவே. அதிலாவது விடை கிடைக்கலாம் என்று தேடினால், 1968-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி கனிமொழி என்ற பெயரில் ஒரு பெண் குழந்தை சென்னையில் பிறந்திருக்கிறது.
சென்னை 600017, கிரி ரோட்டில் உள்ள ‘ஹாஸ்பிடல் 50’ என்ற முகவரியில் பிறந்துள்ள ‘எம். கனிமொழி’. ஆனால் அது வேறு கனிமொழி போலிருக்கிறது. தந்தையார் பெயர் “எம். கருணாமூர்த்தி”. தாயார் பெயர் “ராஜி”. வீட்டு விலாசமும் தி.நகர் திருமூர்த்தி தெரு என்று தான் கொடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் பெயர் ஏறக்குறைய ஒத்து வருவது போல அதே ஜனவரி 5-ம் தேதியில் பிறந்த பெண் குழந்தைக்கு அதே ‘கனிமொழி’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது உண்மையிலேயே எதிர்பாராத அதிசயம் தான்.
சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறை இணைய தளத்திலிருந்து அந்த பிறப்புச் சான்றிதழை இங்கே பார்க்கலாம்.
இப்போது, இத்தனை ஆண்டுகள் கழித்து ராசாத்தி அம்மாளையும் தனது மனைவி தான் என்று நேரடியாக ஒப்புக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
திமுக உயர்நிலை செயல் ‘திட்ட’க் குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது, “எனது மனைவிகள் இருவரும் கூட என்னை தீவிர அரசியலில் இருந்து விலகச் சொல்கிறார்கள்” என்று திருவாய் மொழி அருளியிருக்கிறார் கருணாநிதி.
கருணாநிதியைப் பொறுத்தவரை ‘பகுத்தறிவு’ என்பது கலந்த சில ஆண்டுகளில் பல கட்டமாக பரிணாம வளர்சி அடைந்திருக்கிறது. கட்சிக்காரர்கள் கோவிலுக்குச் செல்லக்கூடாது, விபூதி, குங்குமம் பூசக் கூடாது. மீறி இருந்தால், ‘என்னய்யா நெத்தியிலே ரத்தமா?” என்று நக்கல் விடுவார். (அந்தக் காலகட்டத்தில் ‘தக்காளி ஜூஸு’ காமெடி கிடையாது. இல்லையெனில், “என்னய்யா நெத்தியிலே தக்காளி ஜூஸா?” என்று கேட்டிருந்தாலும் கேட்டிருப்பார்!).
அதுவே தனது குடும்பத்தினர் கோவில் கோவிலாகச் சென்று பூஜைக்கு மேல் பூஜை செய்யலாம். தப்பேயில்லை. அது தனி மனித சுதந்திரம்.
இப்போது துணைவியிலிருந்து மனைவி என்ற வார்த்தைப் பிரயோகமும் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி தான் போல!
No comments:
Post a Comment