Monday, April 30, 2018

தர்பூசணி..

ஊரெங்கும் குவிந்து கிடக்கும் தர்பூசணியின் பின்னால் மறைக்கப்படும் இரகசியம்..? விஷமாகும் ருசி... உள்ளங்கையில் விபரீதம்..!!
வட மாவட்டங்களில் விவசாயிகளுக்கு தர்பூசணி பணப் பயிராகிவிட்டது. அதை விளைவிக்கும் நிலத்தில் பெரும் அட்டூழியம் நடக்கிறது.
நிலத்தில் விரிக்கும் பிளாஸ்டிக் பேப்பர், தெளிக்கும் பூச்சிக்கொல்லி, உரம், எல்லாவற்றுக்கும் மேலாக ஊசி மூலம் செலுத்தப்படும் ஊக்க மருந்துகள் என ஏகப்பட்ட ரசாயனக் கலவையில் பயிராக்கப்படும் இப்பழம் பெரும் அச்சத்தை உருவாக்குகிறது.
இயற்கையாய் விளைந்தால் நடுப்பகுதி மட்டும் கூடுதல் இனிப்புடன் இருக்கும். அதனால், பழத்தின் சிவப்பு நிறத்தையும் ஒட்டுமொத்த இனிப்பையும் கூட்டுவதற்கு, ஊக்க ரசாயனங்களை-ஹார்மோன் மருந்துகளை டிரிப்பில் கலந்து செலுத்துகின்றனர். கூடவே பழத்தை நன்றாகப் பருக்கவைக்க, வரப்புகளின் ஓரம் மாட்டு ஊசியுடன் மருந்தடிக்கும் பெண்கள் இந்தத் தொழிலில் ஆங்காங்கே இருக்கிறார்கள்.
கொஞ்சம் உற்றுப் பார்த்தால், தினம் ஆன்டிபயாட்டிக் மருந்து கொடுத்து வளர்க்கப்படும் 60 நாள் பிராய்லர் கோழிக்கும் 60 நாள் பயிரான தர்பூசணிக்கும் அதிக வித்தியாசமில்லை.
தர்பூசணி அறுவடை முடிந்தபின், நிலத்தின் மேல் படிந்திருக்கும் அத்தனை ரசாயன நச்சும், அடுத்த உழவுக்காக உழும்போது மேல் மண்ணிலிருந்து உள்ளே இறங்கும். உள்ளே செல்லும் நச்சு அந்த நிலத்தில் வாழும், நமக்கான உணவைத் தயாரிக்க இடைவிடாமல் உழைக்கும் அத்தனை நுண்ணுயிர்களையும் மண்புழுக்களையும் சேர்த்தே அழிக்கும். நிலத்தடி நீர் வழியே கரைந்து ஓடி, அருகில் உள்ள எல்லா நிலத்துக்குள்ளும் பயிருக்குள்ளும் போய், மனிதரின் நல்வாழ்வுக்குச் சவாலாய் அமையும்.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.
முறையாக மண்ணிலிருந்து அகற்றப்படாத பிளாஸ்டிக் மல்ச்’ 20 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை, நிலத்துக்குள் திணிக்கப்படுகிறது. மிச்சமிருக்கும் பிளாஸ்டிக் மல்ச் எரிக்கப்பட்டு, காற்றில் நச்சு பரப்பப்படுகிறது. அத்துடன் இந்த நவீன தர்பூசணி பயிரிடும் முறைக்காக வயலின் வரப்புகள் அழிக்கப்பட்டு, வயலின் வளமான விளைச்சலுக்குக் காரணமாக இருக்கும் மேல்மண்ணும் தொடர்ச்சியாக அழிந்துபோகிறது.
சென்னை முதலான பெருநகருக்குத் தினம் ஆயிரக்கணக்கான டன் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் இந்த தர்பூசணியை, மருந்திட்டு வளர்க்கும் ‘பயிர் வணிகர்கள்’ ஒரு தர்பூசணியைக்கூடச் சாப்பிடுவதேயில்லை என்பதே உண்மை.
Image may contain: outdoor
உழவின் அடிநாதமே, உழவின் சக பயனைக் கால்நடைக்கு அளிப்பதுதான். இந்தப் பயிரின் இலைகள், கால்நடைக்கு ஒருபோதும் உணவாவதில்லை.
இப்படிச் சூழலியலைச் சீர்கெடுத்து விளைவிக்கப்படும் ரசாயன தர்பூசணிக்குப் பின்னால் போவதைவிட நீர்மோர், கம்பங் கூழ், பதநீர், இளநீர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றை மட்டுமே கோடைக்குப் பருகலாம் எனத் தோன்றுகிறது.
ஊரெங்கும் குவிந்து கிடக்கும் இனிப்பும் சிவப்பும் நிறைந்த தர்பூசணியின் பின்னால் மறைக்கப்படும் இந்தச் செய்திகளைத் தாகத்துடன் காத்திருக்கும் நுகர்வோருக்கு வேகமாகச் சொல்ல வேண்டிய நேரம் இது.
அரசும் பல்கலைக்கழகங்களும் இதுகுறித்து ஆய்வுசெய்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், இப்பூசணி வணிகத்தால் உறிஞ்சப்படப் போவது, நிலத்தின் வாழ்வு மட்டுமல்ல நம் வாழ்வும் சேர்த்துத்தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...