செயல் என்று ஒன்று நடைபெற நீ காரணம் இல்லை !! செயல்படுத்துபவனே செயல்புரிய வைக்கிறான் என்று செயல்படுத்துபவனை உணர்ந்து அனுபவிக்கவே ருத்ராட்சம் அணிகிறோம் !!
செயவிப்பவனை அறியாதே நான் செய்கிறான் என்ற மாயை விலகவே ருத்ராட்சம் அணிகிறோம் !!
அவன் இன்றி எந்த செயல் நடைபெறும் ?? அவனை அனுபவிக்கையில் வேண்டும் செயல் ? வேண்டாத செயல் என்று ஏதாவது உண்டா ??
முதலில் செயல் என்றால் என்ன என்று தெளிவு கொள்வோம் !!
நாம் என்ன செயல் செய்தாலும், நடப்பது என்ன என்று சற்று உற்று நோக்குங்கள் !!
இப்படி செயல்படவேண்டும் என்ற விருப்பம் மட்டுமே உன்னுடையது போல தோன்றும் ??!! மற்ற நடவடிக்கை எல்லாம் எப்படி நடைபெறுகிறது என்று பார்ப்போம் !!
உதாரணமாக இந்த பதிவையே எடுத்து கொள்ளுங்கள் !!
எத்தனையோ பதிவுகள் கொண்ட முகநூலில் இந்த பதிவை படிக்கவேண்டும் என்று உங்கள் கண் முன் நிறுத்தி அதை பார்க்கவைத்தது நீங்களா ??
அப்படியே பார்த்தாலும் படத்தை மட்டும் பார்த்துவிட்டு தள்ளிப்போகாது உள்சென்று இந்த பதிவை படிக்கவேண்டும் என்று உங்களை தூண்டியது நீங்களா ??
அப்படி இந்த பதிவை உங்கள் கண் கொண்டு பார்த்து, அந்த எழுத்துகள் புரிந்து, அந்த வார்த்தைகள் உங்கள் மூளைக்கு போய் அதன் பொருளை உங்களுள் உணர நீங்கள் என்ன செய்திர்கள் ??
அப்படியே பொருள் உணர்தாலும், எத்தனையோ வார்த்தைகள், வரிகள் கடக்கும் போது, சில வரிகள் / வார்த்தைகள் உங்கள் சிந்தனையில் மீண்டும்மீண்டும் நினைவுக்கு வர நீங்கள் காரணமா ??
உங்கள் கண்ணுக்கு ஏது இந்த பதிவின் தொடக்கம் ஏது பதிவின் முடிவு என்று நீங்களா சொல்லிகொடுத்தீர்கள் ??
இதுவரையில் உங்களுக்குள் நடைபெற்ற செயபாட்டை பார்த்தோம் !!
இப்போது உங்களுக்கு வெளியே இதே பதிவை படிக்கும்போது !!
உங்கள் செல்லில் சார்ஜ் இருக்கவேண்டும் !!
நெட் டேட்டா இருக்கவேண்டும் !!
இந்த பதிவை படிக்கும் சூழல் உங்களை சுற்றி இருக்கவேண்டும், ( ஓர் நிழல், காற்றுஓட்டம், பிற சத்தம் இல்லது, யாரும் இடையுறு செய்யாது இருக்கவேண்டும் )
இப்படி எல்லாம் இருந்தால் தான் உங்களால் ஓர் பதிவை கூட படிக்கமுடியும் !!
இப்போது பாருங்கள்
உங்களுள் இருந்து பார்க்கவைத்து, படிக்கவேண்டும் என்ற ஆர்வம் தோன்றவைத்து, அதற்க்கு உரிய உறுப்புகளை இயக்கி உங்களை படிக்கவைத்தது யாரு ??
அதேபோல வெளியேயும் இந்த பதிவை படிக்கும் சூழலையும் நீங்கள் அமைத்து கொள்ளவில்லை !!
அப்போது உங்கள் செயல் என்று ஏது இருக்கிறது ??
அப்போது உங்கள் செயல் என்று ஏது இருக்கிறது ??
இதில் இந்த செயல் / அந்த செயல் என்று பிரித்து பார்க்க ஏதுமில்லை, அவனே உங்களை கொண்டு புரிவிக்கும் செயலையே நீங்கள் புரிவதாக கருதிக்கொண்டு இருக்கிறீர்கள், அப்படி உங்களை கொண்டு செயல்படுவத்தில் கிட்டும் ஆனந்தமும் / அனுபவமும் உங்களை பக்குவபடுத்தவே நிகழ்கிறது உங்கள் மீது உங்களைவிட அக்கறை கொண்டவன் கருணையாலே !!
அந்த கருணையை கருணை என்று அனுபவிக்கவே ருத்ராட்சம் என்ற சிவ சின்னம் உங்கள் உணர்வை தூண்டும் !!
அதையும் அணியவேண்டும் என்ற விருப்பமே, உங்கள் மீது கொண்ட கருணையால் அவன் உங்களுள் விதைத்ததே உங்கள் விருப்பமும் என்று உணர்வோம் !!
உணர்வித்து செயல்படுத்திக்கொண்டு இருப்பவன் திருவடியை போற்றுகின்றேன் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே.
No comments:
Post a Comment