நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்
நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட்டால்
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின்
பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. அதனால் மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் இந்த நெய்-க்கு எப்போதுமே முதலிடம் உண்டு.
இந்த நெய்( #Ghee) யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். அவ்வாறு நெய்யை உருக்கி சுடு சோற்றில் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும் வல்லமை கொண்டது.
தோசை வார்க்கும் போது எண்ணைய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.
மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
ஞாபக சக்தியை தூண்டும்
சரும பளபளப்பைக் கொடுக்கும்
கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
உடல் வலுவடையும்
குடற்புண் குணமாக்கும்
No comments:
Post a Comment