இவங்க பழைய வரலாற கேட்டீங்கன்னா, பயங்கர டெர்ரரா இருக்கும். தோள்ல கருப்பும் சிவப்புமா ஒரு மப்ளர போட்டுக்குவாங்க. மீசைய நல்லா முறுக்கி ஏத்தி விட்டுட்டு, மூஞ்சிய வெரப்பா வெச்சுக்குவாங்க. எந்த கடைல போய் எதை வாங்குனாலும், இவனுங்க மூஞ்சிய பாத்தா கடைக்காரன் காசு கேக்க மாட்டான். இவனுங்க மொதோ மொதலா வேலைய ஆரம்பிக்குறதே... ஊருக்குள்ள ஐஸ் வித்துகிட்டு வர்ற அப்பாவிகிட்டதான். ஒரு பத்து அல்லைகைகள கூட நிறுத்திகிட்டு ஐஸ்காரன கூப்ட்டு, எல்லாருக்கும் ஐஸ் குடுக்க சொல்லுவான். குடுத்து முடிச்சு, காசு கேட்டா ரெண்டு அறைய விட்டு விரட்டிவிடுவான். அவனும் பாவமா அடிய வாங்கிட்டு அழுது கிட்டே போயிடுவான். இதெல்லாம் கண்ணால பாத்திருக்கேன். உடனே அந்த அல்லகைங்க, ஊருக்குள்ள அண்ணன ரௌடியா பார்ம் பண்ணி விட்ருவாங்க.
நம்ம ஏரியால ஒருத்தன் இருந்தான். பேரே DMK காளியப்பன் அல்லது போக்கிரி காளியப்பன் (பேர மாத்தியிருக்கேன்). போலீஸ் ஸ்டேஷன்ல போக்கிரிகள் பட்டியல்ல இந்தாளோட பேர் இருந்தது. ஒரு நாலஞ்சு வருஷம் முன்னாடி இறந்துட்டாப்ள. அந்தாளு பேசுற மேனரிஸமும், தெனாவெட்டும் எவனையும் மிரள வைக்கும். பெட்டிகடை, பழக்கடை, வொய்ன் ஷாப் (வொய்ன் ஷாப்ல தினமும், காலை மாலைன்னு ரெண்டு கட்டிங் மாமூல்), மளிகை கடை, டீ கடை ன்னு ஒரு கடைய விடமாட்டான். எல்லா கடைலையும் மாமூல்தான். வொய்ன் ஷாப்ல எவன், டம்ளர்ல சரக்கு ஊத்தி வெச்சிருந்தாலும், எடுத்து அடிச்சுட்டு வந்துடுவான். எவனும் கேக்க முடியாது. இந்தாள தெரியாதவன் எகிறினாலும், பார்காரன் இவனோட வீர வரலாற மிரட்டலா சொல்லி, சமாதானபடுத்தி அனுப்பிடுவான். ரெண்டு தடவ புதுசா ட்ரெயினிங் வந்த போலீஸ் மேலயே கைவெச்சிருக்கான்.
2000 வருஷ டைம்ல, வேலை நிமித்தமா நான் அதிகமா ஆந்திராவுலதான் இருப்பேன். எப்பவாவது வரும்போது இவன பத்தி சொல்லுவாங்க. ஆனா நேருக்கு நேரா மீட் ஆவல. ஒருமுற அப்டி வந்திருக்கும் போது, நானும் என் தோஸ்த் ஜெகாவும் நைட் சுமார் 11 மணியிருக்கும். ஒரு ஆப்ப வாங்கிட்டு பாருக்குள்ள போறோம் ... பார்காரன், "அண்ணே காளியப்பன் வர்ற நேரமாச்சு. சீக்கிரம் கிளம்புங்க" ன்னான். அப்போதான் ஜெகாகிட்ட கேட்டேன், "யார்ரா அவன் ? அடிக்கடி பேர் அடிபடுது. கடைகள்ல மாமூல் வாங்குறானாம்" னேன். ஜெகா, அவனோட வீட்ட அடையாளம் சொல்லும் போதே... எனக்கு அவன அடையாளம் தெரிஞ்சது. "சரி இரு, இன்னைக்கு சுளுக்கெடுத்து விட்ரலாம்" ன்னு பேச்சை முடிக்குறதுக்கு முன்னாடி, காளியோட கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிருக்கும் போல, கெத்தா மீசைய முறுக்கிட்டு என்ட்ரி குடுக்கறான். நேரா எங்க டேபிளுக்கு தான் வந்தான். நாங்க மொதோ ரவுண்ட முடிச்சிட்டு, அடுத்த ரவுண்டுக்கு வாங்கி வெச்சிருந்த, 'பிரிக்கான்ஸ் பிரீமியம்' ஆப் பாட்டில் மேல கைய வெச்சான். வெக்கும் போதே காதோட சேர்த்து ஒன்னு விட்டேன். அவனுக்கு பொறி கலங்கி போச்சு. 'என்ன நடக்குது, நம்ம மேல ஒருத்தன் கை வெச்சுட்டானா?' ன்னு காளி யோசிக்குறது குள்ளயே ஜெகா ... ரெண்டு காலி பீர் பாட்டில எடுத்து, எனக்கு ஒன்ன வீசினான். "டேய் ... பாட்டில் வேணாம்" னு அவன்கைல இருந்ததயும் பிடிங்கி வீசிட்டு, வேற ஏதாவது கிடைக்குமான்னு தேடுறோம்... சைக்கிள்ல ரெட்டை தண்ணி குடம் மாட்டுற ரோப்பும், ஒரு பழைய சங்கிலி தராசும் கிடைச்சது. ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் வெளுத்து தொவச்சோம். பார்கார ஓனரு & பசங்க, குடிக்க வந்த உள்ளூர்காரங்க எல்லோருக்கும் ஒரே சந்தோசம். எவனும் தடுக்கல. கடைசியா... பார் மறைப்புக்கு வெச்சிருந்த சீட்ட பிச்சுகிட்டு ஓடிட்டான்.
சரி இவன் பெரிய ரௌடியாச்சே ... கத்தியோட நம்மள தேடி வருவான்னு அடுத்த நாள் காலைல, ஆளுகொரு 'நாஞ்சாக்'க எடுத்து இடுப்புல சொருவிட்டு, (அப்போ நாங்க ரெண்டு பேரும், சிலம்பம் & நாஞ்சாக் எக்ஸ்பர்ட்ஸ்) அவன் வழக்கமா டீ சாப்புடுற டீ கடைல நிக்கறோம்... மூஞ்சி யெல்லாம் வீங்கிப் போய்.., காளியப்பன் நேரா எங்கிட்ட வந்தான். எங்க அப்பாபேர சொல்லி, "தம்பி நீ இன்னாரு மகனா ?" ன்னு கேட்டான். ''ஆமா இப்ப அதுக்கென்ன'' ன்னேன். "நானும் உங்கப்பாவும் ஒன்னா படிச்சவங்க. நீ நைட்டே என்கிட்ட, இன்னாரு மகன்னு சொல்லி இருக்கலாமில்ல. என்னப்பா ... நாமெல்லாம் தாயும் புள்ள மாதிரி. எனக்கே சங்கடமா இருக்கு" ன்னு கொழைய ஆரம்பிச்சுட்டான். (அப்போ எங்க அப்பாவுக்கு வயசு 60 ம், இவனுக்கொரு 45 to 48 இருக்கும்). "அடிவாங்குன உனக்கென்னடா அவ்ளோ சங்கடம்" கும் போதே, ஜெகானுக்கு சிரிப்ப அடக்க முடியல. "டேய்... அவனுக்கு ஒரு டீய குடுத்து அனுப்பி விடுங்கடா" ன்னான். "தம்பி ஆஸ்பத்திரி செலவுக்கு ஏதாவது .." ன்னு இழுத்தான்... "இந்தா வெச்சு தொல. கிளம்பு " ன்னு விரட்டி விட்டோம். ஆனா... அன்னைக்கு சாயங்காலம் பழக் கடகாரன் கிட்ட மாமூல் கேக்க போய் அடிவாங்கி... அன்னையிலிருந்து, தினமும் எவனாவது ஒருத்தன் கிட்ட வாங்கிட்டே இருந்தான். அதுபோல, இவனுங்கள பொறுத்தவரை, யார் ஆரம்பிச்சு விடுறதுன்னு தான் பிரச்னை. ஆரம்பிச்சு விட்டா போதும், ஜனங்க பார்த்துக்குவாங்க.
இப்போ பழைய கெத்து நெனப்புலயே ... வந்து பிஜேபின்ற புலிவால புடிச்சுட்டாங்க. இப்போ புலிய பலம் கொண்ட மட்டும் வால பிடிச்சு சுத்திவிட்டு மயக்கம் போட வெக்கவும் முடியாம, புலிக் கடியோட வலிய தாங்கவும் முடியாம, பலமா திருப்பி கடிக்கவும் முடியாம... 'குழாயடி சண்ட' போர் யுக்திய ரகசியமா கைல எடுத்து.., எச்சி துப்பும் போராட்டம், மண்ண தூவி... "நாசமா போ"னு சாபம் விடும் போராட்டம், முட்ட மந்திரிச்சு விடுற போராட்டம், மாரியாத்தா கோயில்ல காசு வெட்டி போடுற போராட்டம், மாகாளியாத்தா கோயில்ல ஈர துணியோட மொளகா அரைச்சு போடுற போராட்டம்னு பண்ணிகிட்டு திரியுறாங்க.
No comments:
Post a Comment