அன்று அபிராமிப் பட்டர் அரசர்கள் செய்யும் அநீதிகளிலிருந்து இந்த நாடு எப்படி இருக்கின்றது என்ற நிலையையும் ஒவ்வொரு அரசனும் இங்கே எவ்வாறு எவ்வழியில் வழிபடுகின்றான் என்ற நிலைகளையும் உணர்த்தியவர்.
அவர் நல்ல ஒழுக்கங்களையும், உயிரை எப்படி நேசிக்க வேண்டும் என்றும் உடலில் உணர்வை எப்படி இயக்குகிறது என்ற நிலையும் உண்மையை உணர்த்தும் விதமாக நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். ஆனால், அவரைப் பித்தர் என்றே தான் கூறினார்கள்.
சரபோஜி அரசன் அபிராமி ஆலயத்திற்குள் வழிபட வரும் பொழுது அந்த ஆலயத்திற்குள் அமர்ந்திருந்த அபிராமி அவனை மதிக்கவில்லை.
ஆகவே, இவன் யார்..,? ஏன் எழுந்து எனக்கு மரியாதை செலுத்தவில்லை என்று கேட்கின்றான் அரசன்.
இவனுக்கு மரியாதை செலுத்த வேண்டியதில்லை. அருள் ஞானத்திற்கே அந்த அறிவின் தன்மை செலுத்த வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார் அபிராமி.
அரசன் கேட்கப்படும் பொழுது இப்படிச் சொன்னால் நீ அவ்வளவு பெரிய ஞானி என்றால் இன்று திதி என்ன? என்று கேட்கின்றான். அன்றைய தினம் அமாவாசை.
அமாவாசை அன்று பௌர்ணமி என்று அபிராமிபட்டர் சொல்லிவிட்டார்.
நீ பௌர்ணமி என்று எப்படிச் சொல்லலாம்? இன்று இருளான நாள் தானே என்று சரபோஜி கேட்கின்றான்.
ஆனால், அதே சமயத்தில் மனதிற்குள் தான் இருள் இருக்கின்றதே தவிர மனிதனுக்குள் அந்த அருள் ஒளி இல்லை என்பதைத் தெளிவாக்குவதற்காக நீ வரும் அரச போகத்தின் நிலைகள் கொண்டு வழிபடுகின்றாய்.
அதன் வழி வழிபட்டாலும் உன் வழி மக்களை நீ திசை திருப்பும் நிலைதான் வருகின்றதே தவிர நீ மக்களுக்கு நல்லொழுக்கத்தைக் கொடுக்கவில்லை. ஒருவனை இருள் சூழச் செய்யும் நிலைகளிலேயே இருக்கின்றாய்.
ஆகவே, “ஒளி கொண்டு” அறிவாக்க வேண்டும் என்ற நிலையை அன்று பித்தரைப் போன்று இருந்த அபிராமி இன்று “இது (பௌர்ணமி) தான்” என்று காட்டினான்.
நீ அதைக் காட்டவில்லை என்றால் உன் சிரசை வாங்கிவிடுவேன் என்கின்றனர்.
உண்மையைக் காட்டும் வரையிலும் விடமாட்டேன் என்பதற்காக விறகுக் கட்டைகளை ஏற்றி நெருப்பை ஏற்றினார்கள் என்றும் கற்பனைக் காவியமாக அன்று அபிராமி அந்தாதி பாடினார் என்று சொல்லிவிட்டார்கள்.
பாடியவுடன் அந்தத் தேவி எழுந்து வந்து அபிராமிப்பட்டரைக் காப்பாற்றினார்கள் என்றும் ஸ்தல புராணங்களை மாற்றி அந்த ஞானியின் தத்துவத்தையே அரசனுக்குகந்ததாக மாற்றிவிட்டார்கள்.
அவர் சொன்ன நிலைகள் மனிதனுக்குத் “திதி” கிடையாது. மனிதன் உருவாக்கும் ஆற்றல் பெற்றவன்.
ஏனென்றால், மிருகங்களோ மற்ற உயிரினங்களோ தன் உணவுக்காகவோ பாதுகாப்பிற்காவோ சென்றாலும் கிடைக்கவில்லை முடியவில்லை என்றால் மடிந்துவிடும்.
மனிதனோ நீர் இல்லை என்றால் இன்று 1000 அடி அல்லது 1500 வடி போர் செய்து நீரைக் கொண்டு வருகின்றான்.
அதே போன்று வெளிச்சம் இல்லை என்றால் மின்சாரத்தைக் கொண்டு உருவாக்குகின்றான். அது இல்லை என்றால் டார்ச் லைட் கொண்டு வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றான். அதுவும் இல்லை என்றால் ஒரு மெழுகுவர்த்தியாவது வைத்து வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றான்.
ஆகவே, மனிதனின் ஆறாவது அறிவு பிரம்மாவைச் சிறைபிடித்தான் முருகன் என்ற நிலையில் அறிவின் ஒளியின் சுடராக (பௌர்ணமி என்ற நிலையில்) சிருஷ்டிக்கும் தன்மை பெற்றவன் என்ற தத்துவத்தைத்தான் அங்கே செயல்படுத்திக் காட்டினார் பித்தரைப் போன்ற அபிராமிபட்டர்.
ஆனால், அவர் சொன்ன தத்துவத்தை மறைத்துவிட்டு மூலத்தைக் காட்டாமல் பக்தி என்ற நிலையில் உடலின் இச்சைக்குத்தான் வழி காட்டுகின்றார்களே தவிர மனிதன் அடைய வேண்டிய எல்லையைக் காட்டவில்லை.
No comments:
Post a Comment