எதனின் உணர்வை நாம் எடுக்கின்றோமோ அந்த உணர்வின் சத்தை உயிர் நம் உடலாக மாற்றுகின்றது. நாம் வேதனை வேதனை என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டேயிருப்போமாயின் அந்த உணர்வுகள் நம்மிடத்தி;ல் பதிந்து ஜீவ அணுக்களாக விளைகின்றன.
வேதனை என்ற உணர்வால் விளைந்த நஞ்சான அணுக்களுக்கும் நம் உடலில் ஏற்கனவே விளைந்திருக்கும் நல்ல உணர்வின் அணுக்களுக்கும் போராட்டம் நடைபெறுகின்றது.
அப்பொழுது நம் உடலில் எதிர்மறையாகி கை கால் குடைச்சல் உடல் வலி ஆகியன உண்டாகின்றது. இந்தத் தீமையான உணர்வுகள் நம் உடலில் அதிகமாக விளையும் பொழுது நோயாக மாறுகின்றது.
கோப உணர்வுகளை நாம் பெறுவோமாயின் அவை நம் சுவாசத்தில் கலந்து உமிழ்நீராகி உடலில் இணைகின்றன. இந்தக் கோபமான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது நம் நரம்புகளில் முறுக்கேறி நம் உடல் “பட படவென” நடுங்கும் நிலை உண்டாகின்றது.
இத்தகைய கோப உணர்வுகள் நம்மிடத்தில் அதிகமாக விளைய விளைய இரத்த அழுத்தம் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களும் அதனைத் தொடர்ந்து பக்கவாதம் போன்ற நோய்களும் தாக்குகின்றன.
பிறருடைய வாழ்க்கையில் நடந்த வேதனையான சமவங்களைக் கேட்டறிய நேரும் பொழுதும் பிற நோயாளிகளின் வேதனைகளைக் கேட்டறிய நேரும் பொழுதும் பிற மனிதர்கள் விடும் சாபங்களைக் கேட்டறிய நேரும் பொழுதும் தீய உணர்வுகள் நம்மையறியாது நம்முள் பதிந்து நோயாக விளைந்து விடுகின்றன.
அதே சமயத்தில் பரம்பரையாக வருகின்ற நோய்களும் இருக்கின்றன. அதாவது முன்னோர்கள் உடலில் விளைந்த நோயின் அணுக்கள் நம்மிடத்திலும் அதே நோயினை விளைய வைத்துவிடும்.
ஆஸ்த்மா நீரிழிவு போன்ற நோய்கள் அத்தகைய வகையைச் சார்ந்தவை.
இவைகளிலிருந்தெல்லாம் நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும். அதற்கு ஒரே வழி துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நம்முள் இணைப்பதே.
வேதனைகள் அதிகமாக நம்மிடத்தில் விளையும் பொழுது அது கேன்சர் நோயாகவும் மாறிட வாய்ப்புண்டு. ஆகவே, வேதனை கோபம் வெறுப்பு போன்ற உணர்வுகளை நாம் எடுக்காது தவிர்ப்போம்.
தீய உணர்வுகளால் விளையும் நோய்களே அதிகம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே இத்தகைய தீய உணர்வுகளைக் கேட்டறியும் பொழுது அவை நம் ஆன்மாவில் பதிந்திடாவண்ணம் அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அம்மா அப்பா அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து ஏங்கி இருக்க வேண்டும்.
கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிடுங்கள்.
பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் உடலிலுள்ள நோய்கள் நீங்கி நாங்கள் பூரண குணமும் உடல் ஆரோக்கியமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற இந்த உணர்வை ஏங்கித் தியானிக்கவும்.
நோயின் வேதனை நம் உடலில் எந்தப் பாகத்தில் இருக்கின்றதோ அங்கே துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படர்ந்து வலியின் தன்மை குறைய வேண்டும் என்று தியானிக்க வேண்டும்.
கேன்சர் நோயாக இருந்தால் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற வலுவான உணர்வுடன் உடலில் பாதிக்கப்பட்ட இடம் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பரவச் செய்யவேண்டும்.
எந்த நோயாக இருந்தாலும் மேலே குறிப்பிட்டபடி ஆத்ம சுத்தி செய்தால் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல்கள் உங்களுக்குள் பெருகி அதனால் நல்ல ஜீவ அணுக்கள் பலம் பெற்று வீரியம் அடைந்து நம் உடலில் தீமையை விளைய வைக்கும் அணுக்கள் செயல்படும் நிலையைப் போக்குகின்றது.
இவ்வாறு செய்யச் செய்ய நோயின் வேகம் குறைந்து குணம் தெரிவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
நோயுற்றவர்களை நீங்கள் காணச் சென்றால் முதலில் ஆத்ம சுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைத் தியானித்து நமக்குள் அதைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் உங்கள் நோய் நீங்கும். நீங்கள் நலம் பெறுவீர்கள் என்ற வாக்கினைப் பதியுங்கள். அதே போல் அவர்கள் தியானிக்கும் பொழுது நாம் கொடுக்கும் இந்த வாக்கின் உணர்வின் ஆற்றலும் துணை நின்று சீக்கிரம் உடல் நலம் பெறவைக்கும்.
குடும்பத்திலுள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை வலுவேற்றிக் கொண்டு நோய்வாய்ப்பட்டவர் நலம் பெறவேண்டும் என்று தியானித்தாம் நன்மை உண்டாகும்.
அவர் நலம் பெறவேண்டி நாம் தியானிக்கும் பொழுது நமக்குள்ளும் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் பெருகுகின்றது. நம் உடலில் உள்ள நல்ல அணுக்கள் வீரிய சக்தி பெறுகின்றன.
நோய் நீங்க நோயாளிகள் சதா காலை மாலை மதியம் இரவு என்று ஆத்ம சுத்தி செய்து தியானிக்கலாம். நேரம் காலம் கணக்கில் கிடையாது.
எவ்வளவுக்கெவ்வளவு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலுடன் ஒன்றி இருக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு விரைவில் நலம் பெறலாம்.
No comments:
Post a Comment