பத்து வருட கதையை ஒரே நாளில் சொல்ல முடியாது என சொல்லி இருக்கிறார் நிர்மலா தேவி. அந்த கதை என்னவென்றால்,
சுடிதாரும் சேலையும் குடுத்து நிம்மியின் கல்லூரியில் படித்த எந்த பெண்களை யாருடன் கூட்டி விட்டார் என்பதே!
இது உண்மை என்று வைத்துக் கொள்வோம்.
பத்து வருடங்களுக்கு முன் படுக்கையை பகிர்ந்த மாணவிக்கு இப்பொழுது திருமணமாகி ஆறு வயதில் குழந்தை இருக்கும். அந்த பெண்ணை சாட்சியாய் அழைத்தால்,
அவள் நீதிமன்றம் வந்து சாட்சி சொல்வாளா? ஆமாம்! நிம்மி மாமி சொல்வதெல்லாம் உண்மை என சொன்னால் அவளின் கணவனால், குடும்பத்தாரால் துரத்தப்பட்டு நடுவீதிக்கு வர நேரும் என்பது அவளுக்கு தெரியாதா?
எனவே,
சத்தியமாக அப்படி ஒரு சம்பவம் நடைபெறவேயில்லை! நிம்மி சொல்வதெல்லாம் பொய் என்பாள் அவளும், அவள் சார்ந்த பெண்களும்.
சாட்சிகள் இல்லாத குற்றம் நீதிமன்றத்தில் ருசுவாவதில்லை. ருசுவாகாத குற்றம் தண்டனை பெறுவதில்லை.
பிறகென்ன ... விடுதலை தான்!
பனை உயரத்திற்கு பொங்கி ஆக்ரோஷமாய் கரையில் மோதி கரைந்து மீண்டும் கடலுக்குள்ளே செல்லும் அலை போலே அசுர வேகத்தில் எழுந்து, ஆமை வேகத்தில் நடந்து ஊமை போல் முடங்கி விடுதலை பெறப் போகும் நிர்மலா தேவிக்கும், அவள் வழக்கிற்கும் இவ்வளவு முக்கியத்துவம் எதற்கு?
ஒருமுறை ஒரு நடிகை விபச்சார வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தினாள். குற்றத்தை ஒப்புக் கொண்டதால் உங்கள் இமேஜ் பாதிக்காதா? தொழில் சரியாதா? என நிருபர்கள் கேட்ட போது நடிகை சொன்னாள்,
"இந்த வழக்கில் நான் அபராதம் செலுத்தியதன் மூலம் நான் விபச்சாரம் செய்கிறேன் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. என்னை அழைக்கலாமா? வேண்டாமா? என தயங்கி நின்றவர்கள் இப்போது கிடைத்துள்ள இலவச விளம்பரத்தால் இனி தைரியமாக அழைப்பார்கள். இது தான் எனக்கு தொழில். நடிப்பு வெறும் பொழுதுபோக்கு. இனி என் தொழில் வளரும். வருமானம் பெருகும்!" என்றாள்.
அதே கதை தான் நிம்மிக்கும். கலவி என்பது நிம்மியின் தொழில். கல்வி என்பது அவளின் பொழுதுபோக்கு. ஆளாளுக்கு புகையை ஊதி அவளின் தொழிலை பழுக்க வைத்திருக்கிறோம்.
இருந்தாலும் இந்த விசயத்தில் விடாமல் நாம் பொங்கி கொண்டே இருப்போம். அடுத்த மேட்டர் கிடைக்கும் வரை ..!
No comments:
Post a Comment