Thursday, July 5, 2018

என்னை குடும்பத்தில் இருந்து நீக்கியதற்கு நன்றி என தெரிவித்தார்.

எங்கு பார்த்தாலும் அண்ணன் திவாகரன் அவர்களையும் அவரது மகன் ஜெயானந் அவர்களையும் கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அதில் சின்னம்மாவை அக்கா என்று அண்ணன் திவாகரன் அழைக்கக்கூடாது என்று கண்டிக்கப்பட்டுள்ளது .
உங்கள் அனைவருக்கும் சில கேள்விகள்...
இந்த போஸ்டரில் அண்ணன் திவாகரனை கண்டிக்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.
தினகரன் அவர்கள் தன்னிச்சையாக இந்த உயரத்தை எட்டியுள்ளாரா ? என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்.
தினகரன் அவர்களின் இந்த வளர்ச்சிக்கு அண்ணன் திவாகரனின் உழைப்பில் பெரும் பங்கு உண்டு
அது மட்டும் இல்லாமல் ஜெய்ஆனந் அவர்களும் தினகரனின் தலைமை ஏற்று அவருக்காக உழைத்தார் என்பது நிதர்சனமான உண்மை
அண்ணன் திவாகரனின் ஆணைக்கேற்று தெற்கு மாவட்டத்தை சேர்ந்த பல தலைவர்கள் தினகரனுக்காக உழைத்தார்கள் அவரின் அறிவுறுத்தலின் படி தினகரனிடம் இணைத்து செயல்பட்டனர்.
Image may contain: 1 person, sitting
அவர்களின் தயவால் இவ்வளவு உயரத்தை எட்டிவிட்டு இன்று அண்ணன் திவாகரன் அவர்களையும் அவரது மகன் ஜெயானந் அவர்களையும் விமர்சிப்பது கண்டிக்கதக்கது
சின்னம்மாவின் பெயரில் வந்த நோட்டீஸ் சின்னஅம்மாவிடம் இருந்து வந்ததோ இல்லை அவரின் பெயரை பயன்படுத்தி வெளியிடப்பட்டதோ அது வேறு... இருப்பினும் அந்த தகவல் அண்ணன் திவாகரனை அடைந்ததும் அதை ஏற்று அனைத்து ஊடக நண்பர்கள் முன்னிலையில் நான் இனி அப்படி அழைக்கமாட்டேன் என்று சொன்னார் அதன் பிறகும் நீங்கள் இந்தமாதிரியான கண்டன போஸ்ட்டரை ஏன் அடிக்கிறீர்கள் உங்களுக்கு வெற்று விளம்பரம் தேடவும் தினகரனின் பாராட்டை பெறவும் அவரது மனம் குளிரவும் அண்ணன் திவாகரன் அவர்களை இப்படி பேசுனீர்கள் என்றால் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
அண்ணன் திவாகரனின் அரசியல் அனுபவத்தை நீங்கள் அனைவரும் அறிவீர்... கொஞ்சம் சிந்தித்து செயல் படுங்கள்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...