Wednesday, September 19, 2018

வயிற்றிலுள்ள புழுக்களை வெளியேற்ற மிக எளிய வைத்தியம் – பப்பாளி விதைகள்!!

நாம் சாப்பிடும் சுத்தமில்லாத உணவுகள் மற்றும் கைகளால் குடல்களில் கிருமிகள் தாக்கி லார்வாக்கள் உருவாகி அவை பின் புழுக்களாக மாறி நம் உணவை சாப்பிட்டு அவை உயிர் வாழ ஆரம்பித்துவிடும்.
அதனால்தான் அவற்றை சார்புண்ணிகள் என்று சொல்கிறோம். இவை நம் ரத்தத்தை உறிஞ்சி வாழ்வதால் நமக்கு நோய்கள் மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் உண்டாகும்.
வயிற்றில் புழுக்கள் குழந்தைகளுக்கு விரைவில் ஏற்படும். காரணம் அவர்கள் வெளியே
அதிகம் விளியயாடுவதாலும், அழுக்கு நிறைந்த பொருட்களை தொட்டு அப்படியே
கைகளை வாயில் வைப்பதால், அல்லது கை கழுவாமல் உணவு சாப்பிடுவதால் இந்த
பிரச்சனை உண்டாகும்.
பப்பாளி விதைகளின் அற்புத தீர்வு :
இதற்கு மிக எளிய தீர்வு பப்பாளி விதைகள். அவை கசப்பு சுவை கொண்டவை.
வயிற்றிலுள்ள புழுக்கள் மட்டுமல்லாது, அவற்றின் முட்டைகளையும் அழித்திவிடும்
ஆற்றல் பெற்றவை. அதோடு நச்சுக்களையும் வெளியேற்றும். மலச்சிக்கலையும்
குணப்படுத்தும்.
நைஜீரியாவில் இருக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு வயிற்றில் மோசமான
நாடாப்புழு மற்றும் கொக்கிப் புழுக்கள் இருந்தன. மருந்துகளுக்கு அவை கட்டுப்படவில்லை.
நைஜீரியாவில் பப்பாளி விதைகளின் ஆற்றலை கண்டுபிடிக்க, 2007 ஆம் ஆண்டு ஒரு
ஆராய்ச்சி நடத்தினர். இதில் வயிற்றில் புழு கண்டறியப்பட்ட சுமார் 60 குழந்தைகள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு பப்பாளிகளின் விதைகளை பொடி செய்து கேப்ஸ்யூலாக செய்து தந்த போது அவை அற்புதமாக பலனளித்தது. அவர்களுக்கு செய்த மலப்பரிசோதனையில் புழுக்கள் முற்றிலும் நீங்கிபிட்டிருந்தது. பக்கவிளைவுகளும் இல்லை.
எப்படி பப்பாளி விதைகளை பயன்படுத்துவது?
பப்பாளி விதைகளை சுத்தம் செய்து வெயிலில் உலர வையுங்கள். நன்றாக காய்ந்த்தும்
பொடி செய்து தினமும் அரை ஸ்பூன் விகிதம் குழந்தைகளுக்கு தேனில் குழைத்து தந்தால் வயிற்றுப் பூச்சி புழுக்கள் அடியோடு அழிந்துவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...