சீனாவிலிருந்து இந்தியா மேற்கொண்ட மருந்துப் பொருள்கள் இறக்குமதி, சென்ற நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் 174 கோடி டாலரை (சுமார் ரூ.11,484 கோடி) எட்டியதாக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவைக்கு திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த அறிக்கையில் தெரிவித்ததாவது:
உள்நாட்டு நுகர்வுக்கும் மற்றும் ஏற்றுமதிக்கும் பயன்படும் மருந்துகள் மூலப் பொருளாகவும், விற்பனைக்குத் தயாராக உள்ள நிலையிலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
"பாரசிட்டமால்' மற்றும் "அமோக்ஸிஸிலின்' உள்ளிட்ட 12 வகை அத்தியாவசியமான மருந்துகள் அதிக அளவில் இறக்குமதியாகின்றன. இவ்வகை மருந்துகளின் விலை சீனாவில் மிகவும் குறைவாக உள்ளதே இதற்கு முக்கியக் காரணம்.
சீனாவிலிருந்து கடந்த 2013-14-இல் 211 கோடி டாலர் (சுமார் ரூ.13,926 கோடி) மதிப்பிலான மருந்துப் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்தது. 2014-15-இல் இது 222 கோடி டாலராக (சுமார் ரூ.14,652 கோடி) அதிகரித்தது.
இந்நிலையில் சென்ற 2015-16 நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவிலேயே மருந்துப் பொருள்கள் இறக்குமதி 174 கோடி டாலரை எட்டியது.
2015-16 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான கால அளவில் இந்திய மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி 1,536 கோடி டாலராக (சுமார் ரூ.1.01 லட்சம் கோடி) இருந்தது.
அமெரிக்காவுக்கு 500 கோடி டாலர் மதிப்பிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு 55.50 கோடி டாலர் மதிப்பிலும், இங்கிலாந்துக்கு 51.20 கோடி டாலர் மதிப்பிலும் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன என்று நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு 500 கோடி டாலர் மதிப்பிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு 55.50 கோடி டாலர் மதிப்பிலும், இங்கிலாந்துக்கு 51.20 கோடி டாலர் மதிப்பிலும் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதியாகியுள்ளன என்று நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment