சுகப்பிரசவம் – சிசேரியன் அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்
சுகப்பிரசவம் ( Normal Delivery ) – சிசேரியன் ( #Cesarean #Delivery ) அல்லாத வேறுபல அரிய பிரசவ முறைகள்
ஒரு மிகப்பெரிய முக்கிய கனவாக பெண்களின் வாழ்க்கையில் இருப்பது ஒரு
குழந்தையை பெற்று எடுப்பதுதான். அப்படிப்பட்ட முக்கிய கனவினை நனவாக்குவதற்கு பெண்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து அதா வது பிரசவம் ( Delivery ) மூலம் மறுபிறப்பு எடுத்து தங்கள் குழந்தையை பிரசவிக்கின்றனர். பெண்களில் நிகழும் இந்த பிரசவம் மிகவும் முக்கிய மானது மற்றும் மிக மிக கடினமானது.
பெண்கள் தங்கள் உயிரை ஒரு பொருளென பொருட்படுத்தாது தனக்குள் உருவான உயிர் நல்லமுறையில் வெளியேறி நலமாக வாழ போராடுகி றாள்.
மனிதர்கள் தங்கள் உடல் எடையை தங்கி நடந்து உயிர் வாழவே கஷ்டப்படும் சூழலில், பெண்கள் தங்களுக்குள் வளரும் குழந்தையையும் சேர்த்து சுமந்து வாழ்கி ன்றனர். தன் உடலின் எலும்புகள் பிளந்து, உறுப்புகள் விரிந்து, சதைகள் கிழிந்த நிலையில் தனக்குள் வளர்ந்த ஒரு உயிரை வெளியேற்றுவது என்பது சாதாரணமா ன காரியமல்ல. இப்படிப்பட்ட ஒரு அசாதாரண காரியத்தை செய்துவிட்டு எதுவுமே செய்யாததுபோல சாதரணமாக வாழ்ந்துவரும் பெண்களுக்கு இந்நேரத்தில் நாம் ஒரு சலாம் போட்டே ஆக வேண்டும்.!
குழந்தையை பிரசவிப்பதில் இத்தனை வகைகளா? அறியப்படாத பிரசவ முறைகள்!
பிரசவத்தில் வகைகளா?
பிரசவத்தில் வகைகளா?
பிரசவம் என்பது பெண்களில் இரு வகைகளில் நடப்பதாக நாம் அறிந்து வைத்துள் ளோம். ஒன்று சுகப்பிரசவம்; மற்ற ஒன்று சிசேரியன் (Cesarean). இந்த இரண்டு முறையால் மட்டுமே குழந்தையை பிரசவித்து வெளியேற்ற முடியும் என்று நம்பி வருகிறோம். இந்த இரு முறைகளை விட்டால், குழந்தையை பிரசவித்து எடுக்க வேறு வழியே இல்லாதது போல மக்களிடையே ஒரு வித என்னும் நிலவுகிறது.
கனவை நனவாக்க உதவும் வாய்ப்புகள்!
ஆனால், வளர்ந்து வரும் அறிவியல் எப்படி கருத்தரிக்க பல வித முறைகளை அறி முகப்படுத்தி, பெண்களின் வாழ்க்கைக் கனவை அடைய உதவி இருக்கிறதோ அதே போல், பெண்களின் கனவை நனவாக்கவும் பல வகைகளை அறிமுகப்படுத்தி இருக் கிறது. அப்படி அறிவியல் அறிமுகப்படுத்திய வித்தியாசமான, வழக்கத்தில் உள்ள பிரசவ முறைகள் குறித்து இப்பொழுது பார்த்து படித்து அறியலாம்; மற்றவர் அறிய பதிப்பினை பரப்பலாம்.
இயற்கை முறை பிரசவம்! – Normal Delivery / Natural Delivery
இயற்கை முறை பிரசவம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்; இயற்கை முறை பிரசவம் என்பது சுகப்பிரசவம். இந்த முறையில் எந்த ஒரு மருந்து, ஊசி போன்ற மருத்துவ முறைகளின் தலையீடு இன்றி, குழந்தை தானாக தாயின் வயிற்றில் இருந்து வெளியேற முயன்று, தாய் தரும் அழுத்தத்தால் கருவறையில் இருந்து பிறப்புறுப்பின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
இந்த முறையில் பெண்ணின் உடலில் குழந்தையை பிரசவிக்க என எந்தவொரு மருத்துவ முயற்சியும் மேற்கொள்ளப்படுவது இல்லை; குழந்தை வெளியேற அழுத்தம் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
சிசேரியன் பிரசவம்! – ( Cesarean Delivery )
இந்த முறையும் நாமறிந்த ஒன்றுதான். குழந்தையின் நிலை கருவறையில் மாறு பட்டு இருந்தாலோ, குழந்தைக்கு வேறு ஏதேனும் பிரச்சனைகள் கருவறையில் ஏற் பட்டு இருந்தாலோ அல்லது தாயால் குழந்தையை அழுத்தம் கொடுத்து பிறப்புறுப்பு வழியாக வெளியேற்ற முடியாத நிலை, தாயின் உடலில் ஏதேனும் பாதிப்புகள் ஏற் பட்டிருந்தாலோ சிசேரியன் Cesarean முறையில் பிரசவம் மேற்கொள்ளப்படும். இந்த முறையில் எபிடியூரல் ஊசி மூலம் பெண்ணை மயக்கப்படுத்தி, தாயின் வயிற்றில் அறுவை சிகிச்சை நடத்தி, குழந்தையை வெளியே எடுப்பர்.
பிறப்புறுப்பு வழியான பிரசவம்!
கருவறையில் இருக்கும் குழந்தையை தாயினால் அழுத்தம் கொடுத்து வெளியேற் ற முடியாத நிலையில், வேறுஎந்தவித மருத்துவ கோளாறுகளும், பிரச்சனைகளு ம் ஏற்பட்டு இருக்காத நிலையில் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்காமல், ஒரு சிறிய ஊசி அல்லது மருந்து கொடுத்து, தாயின் வயிற்றில் இருக் கும் குழந்தையை பிறப்புறுப்பு வழியாக வெளியேற தூண்டுவது தான், இந்த பிரசவ முறையின் சாராம்சம்!
இம்முறை கிட்டத்தட்ட இயற்கைமுறை பிரசவம் போன்றதே ஆனால் இதில் மருந்து மற்றும் ஊசிகள் பயன்படுத்தப்படும்; ஆதாவது சில மருத்துவ முறைகளின் தலையீடு இருக்கும்.
வாக்கும் டியூப் பிரசவம்! – Vacuum Tube Delivery
இந்த முறையை நாம் படத்தில் அதுவும் குறிப்பாக நண்பன் படத்தில் பார்த்து இருப் போம். குழந்தையை பிரசவிக்கும் நேரத்தில் தாய் அழுத்தம் கொடுத்து கொடுத்தது, சோர்வாகி மயக்க நிலைக்கு சென்று விட்டால் அல்லது தாயால் போதுமான அளவு அழுத்தம் கொடுத்து குழந்தையை வெளியேற்ற முடியவில்லை எனில், இந்த முறையை பயன்படுத்துவர்.
இந்த முறையில் அழுத்தம் கொடுக்கும் கருவியில் இணைக்கப்பட்ட குழாயை தாயின் பிறப்புறுப்பு வழியாக செலுத்தி, குழந்தையின் தலையை குழாயில் பற்றிக் கொள்ளுமாறு பொருத்தி, குழந்தையை வெளியே எடுக்க தேவையான அளவு அழுத்தம் கொடுத்து குழந்தையை கருவறையில் இருந்து வெளிக்கொண்டு வருவர்.
ஃபோர்செப்ஸ் பிரசவ முறை! ( #Forceps delivery )
எப்படி மேற்கூறிய வாக்கும் டியூப் முறையில் தாயினால் அழுத்தம் கொடுக்க முடியாத நிலையில், தாயின் உடல் நிலை பிரச்சனையை சந்திக்கும் நேரத்தில், குழந்தையை வெளியேற்ற அழுத்தம் கொடுக்கும் கருவி பயன்படுத்தப்பட்டதோ, அதே போல் இந்த முறையில் குழந்தையின் தலையை பற்றி வெளியே இழுக்கும் கருவி தாயின் பிறப்புறுப்பு வாயிலாக செலுத்தப்பட்டு குழந்தை வெளியே எடுக்கப் படும்.
இந்த முறையில் குழந்தையின் தலையை பற்றி வெளியே எடுக்கும் கருவியை உபயோகித்து மருத்துவர்கள் பாதுகாப்பாக குழந்தையை வெளியே எடுப்பர்.
சிசேரியனுக்கு பின் சுகப்பிரசவம்!
முதல் குழந்தையை சிசேரியன் மூலம் பெற்று எடுத்துவிட்ட பெண்கள் மீண்டும் கரு த்தரித்து இரண்டாம் குழந்தையை பெற்று எடுக்கும் சமயத்தில் மீண்டும் சிசேரியன் செய்யாமல் அவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழ வழிவகை செய்து குழந் தையை இயற்கை முறையில் வெளிக்கொணர உதவுவதே இந்த சிசேரினுக்கு Cesarean பின்னான சுகப்பிரசவ முறை! இந்த முறை குறித்த விழிப்புணர்வு கண்டிப்பாக பெண்களிடம் ஏற்பட வேண்டும்.
சிசேரியன் Cesarean செய்திருந்தாலும்கூட சுகப்பிரசவத்தை அவர்களா ல் செய்துகொள்ள முடியும் என்ற புரிதல் மற்றும் விழிப்புணர்வு பெண்க ளின் மனதில் ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம்.!
தலைகீழ் குழந்தை பிரசவம்!
குழந்தை தாயின் கருவறையில் உருவாகி வெளிப்படும் பொழுது தலை முதலில் வெளிப்படும்; பின் மற்ற உறுப்புகள் வெளிவரும். ஆனால் மாறி குழந்தையின் கால் முதலில் வெளிவரும் வகையில் குழந்தை திரும்பி இருந்தால் அது பிரசாத்தின் பொழுது பிரச்சனை ஆக உருமாறலாம்.
எனவே, குழந்தையை தாயின் வயிற்றின் உள்ளாகவே சரியான நிலைக்கு திருப்பி, அதாவது மேலிருக்கும் தலையை கீழாக கொண்டு வந்து, வழக்கமான நிலையை குழந்தை அடைந்ததும் பின் பிரசவ முறையை மேற்கொள்வதும் சமீப காலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.
No comments:
Post a Comment