Monday, September 24, 2018

கதையா? இல்ல, கதை மாதிரியா?

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
*நம்பிக்கையே நம் தும்பிக்கை*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
🌸நம்பிக்கை உள்ளிருந்து ஊற்றெடுக்கும் உயிர் சக்தி. அதை வெளியிலிருந்து ஓருவர் உங்களுக்கு தர முடியும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஓரு முட்டையை உள்ளிருந்து ஓரு சக்தி உடைத்தால் அது ஜனனம். அதையே வெளியிலிருந்து ஓருவர் உடைத்தால் அது மரணம். முன் நிகழ்வு புது வாழ்வின் ஏற்பாடு. பின் நிகழ்வு யாரோ ஓருவரது சாப்பாடு. எனவே உங்கள் சிறைகளை நீங்களே உடைத்தெறியுங்கள். பிறரை எதிர்பார்க்காதீர்கள்.
🍀நம்பிக்கை தான் வாழ்வின் உந்து சக்தி. ஓரு துளி நம்பிக்கையில் அதாவது சின்ன சின்ன மழைத் துளியில் பிழைத்த சிறு செடிகள் பின்னாளில் பெரிய ஆலமரமாய் கிளை விரித்த சம்பவங்கள் உலகில் பல நடந்திருக்கின்றன.
மருந்தால் மருத்துவரால் பிரார்த்தனையால் நாம் உயிர் பிழைத்து விட முடியும் என்கிற சின்ன நம்பிக்கையில் தான் பல நோயாளிகள் அரசு மருத்துவமனையின் நெடிய தாழ்வாரங்களில் படுத்துக் கிடக்கிறார்கள். பிழைத்தும் விடுகிறார்கள்.
இதற்கு நேர்மாறாக , சந்தேகம் , அவ நமபிக்கை பலரை உயிருள்ள பிணங்களாக உலவ விட்டிருக்கிறது. சந்தேகத்திற்கும் அவ நம்பிக்கைக்கும் ஓரு சின்ன வித்தியாசம் சொல்லலாம்.
ஓரு நல்லது நடக்குமோ, நடக்காதோ என்பது சந்தேகம்.
கெட்டது தான் கண்டிப்பாக நடக்கும் என்று தீர்மானிப்பது அவ நம்பிக்கை.
சந்தேகப்படுகிறவர்கள் தானும் துன்பப்பட்டு பிறரையும் துன்பத்தில் ஆழ்த்தி விடுகிறார்கள்.
💧அதனால் ஏதேனும் நடந்து விடும் என்கிற உறுதியான நம்பிக்கை தான் பலரையும் வாழ்க்கையிலும் ஓட வைக்கிறது. எனவே வாழ்வின் மீது நம்பிக்கை வையுங்கள் ....
பயப்படாதீர்கள்....
சந்தேகப்படாதீர்கள்.!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...