உடல் இயங்குகின்றதா..அல்லது, உடலை உயிர் இயக்குகிறதா.உயிரென்றால் எப்படியிருக்கும் நாம் இன்று முகத்தை செல்பி எடுக்கின்றோம். ஆனால், உயிரை செல்பி எடுக்கமுடிவதில்லை. இவ்வளவு பெரிய உடம்பாகட்டும்,அல்லது டயட் கண்ட்ரோலில் இருக்கின்றேன் என்று சொல்பவர் ஆகட்டும், இந்த உடலை இயக்கும் உயிர் எல்லாமே ஒரே போலதான்.ஆன்மா, இவர் இந்து ஆத்மா, இவர் கிறிஸ்துவ ஆத்மா, இவர் முஸ்லீம் ஆத்மா என்பதெல்லாம் ஆன்மாவிற்கு கிடையாது.ஆத்மா ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒன்றுதான் ஆனால், அது எடுக்கும் உடலை பொறுத்து அதனுடைய சுபாவங்கள்,நடைமுறை வேறுபடுகின்றன. பெண்களை சாதாரணமாக நினைக்கும் ஒருவனும் பெண்ணிற்க்குள் இருந்தே பிறக்கின்றான்,ஆனால், சரீர சம்பந்த
பார்வைக்கும், ஆன்மா சம்பந்த பார்வைக்கும் வேறுபாடு உண்டு.நமக்கு முன் ஜென்மம் தெரிவதில்லை.ஆனால், ஆன்மாவில் நாம் செய்யும் பாவங்களும், புண்ணியங்களும் முன் ஜென்மத்திிருந்து பதிவாகி நம்மை பின்
தொடர்கின்றன.இன்றுவரை நீங்கள் எந்த
விஷயத்தில் பலகீனமாக இருக்கின்றீர்களோ, அந்த விஷயம்தான் முன் ஜென்மங்களில் நீங்கள் செய்த பாவம்.சிலருக்கு காம ரூபத்தில் இருக்கும்,சிலருக்கு கோபம் இருக்கும், பேராசை உடையவர், மோகம் உடையவர், அகங்காரத்தின் வசப்பட்டவர்,எதிலும் அலட்சியமாக இருப்பவர், சோம்பேறியாக இருப்பவர், இப்படி இன்றுவரை உங்களிடம் அதிகம் வெளிப்படுவது எது அது தான் முன் ஜென்மத்தில் உங்களை பாவம் செய்ய தூண்டி, இன்றுவரை உங்களை அதற்கு அடிமையாக்கி பலவீனமாக இந்த பிறவியிலும் வைத்திருக்கின்றது.சோம்பேறித்தனம் என்பது என்னோடு முடிந்துவிடுகின்றதே, அலட்சியம்
என்னோடு முடிந்துவிடுகின்றதே இதெல்லாம்
எப்படி பாவமகும் என்கின்றீர்களா,உங்கள் சோம்பேறித்தனத்தால் நீங்கள் நல்ல வாய்ப்பை இழந்ததோடு, உங்களை சார்ந்த பிறருக்கும் அது துன்பத்தின் விளைவுகளை கொண்டுவந்து சேர்த்திருக்கும். அலட்சியத்தினால் சரியான நேரத்தில் தன்னையும்,பிறரையும் கவனிக்காது பொறுப்பில்லாமல் இருத்தல் இதெல்லாமே சின்னவிஷயம் என்று நினைப்போம், ஆனால்,
இவைதான் பெரும் பாவங்களை உருவாக்கி கொண்டுவரும்.உயிர் போகும் நேரத்தில் ஒரு
டம்ளர் தண்ணீர் அருகிலிருந்து கொடுத்தால்
கூட உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்.தண்ணீர்
கேட்டவருக்கு கோலிசோடாவை கொடுத்து கேஸ் அடைத்து செத்தவரும் உண்டு.இது அலட்சியம், மனித வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் தேவை.இவை ஆன்ம
உணர்வுடையவருக்கு இநத கவனம் என்பது இயல்பான ஒன்றாகிவிடும்.எனவே, தன்னை ஒரு உடல் என்பதை மறந்து உயிர் என உணர வேண்டும்.உடல் என்பது கூடு, வெறும் எலும்பு கூடு செத்தபின்னால் வருவது, இது தோல், சதை, ரத்தம் எல்லாவற்றிலும் நிறைந்த
ஆன்மாவின் கூடு.கூடு விட்டு கூடு பாயும் கலையை ஆன்மாதான் செய்து வந்துள்ளது.
இப்பொழுதும் இருப்பது ஆன்மா இந்த உடலில் கர்மங்களை அனுபவிக்கும் கூடு இந்த உடல். இந்த கூண்டில் வசிக்கும் உயிர்ப்பறவையாகிய
நான் ஆத்மா ஆவேன்.ஒரு குண்டூசி முனையில் வெள்ளை பேப்பரில் குத்தினால், எவ்வளவு நுண்ணிய துளையோ, அதைப்போல பல ஆயிரம் மடங்கு நுண்ணியமானது ஆத்மா,
இந்த ஆன்மாதான் வந்தவன்,போனவன், வேண்டியவன், வேண்டாதவன் என்ற பெயர்களை வாங்குவது.மிக பிரகாசமான நுண்ணிய பொருளான ஆன்மா யார் கண்ணுக்கும் தெரிவதில்லை.சாட்டிலைட் மூலம் ஒளிபரப்பப்படும் கதிர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.ஆனால்,அதை காட்சியாக நாம் பார்க்கின்றோம், அதேபோல ஆன்மாவின் எண்ணங்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கை மனித உடலில் உண்மையான காட்சிகளை போல தோன்றுகின்றது. ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உலகம், அதில் பல கற்பனைகள், ஒருவர் அதில் கடவுளுடன் வாழ்வார்,ஒருவர் கொள்கையுடன் வாழ்வார், ஒருவர் இலட்சியத்தை அடைவதற்கு முயற்சி செய்துகொண்டு இருப்பார்.இப்படி ஒவ்வொரு
ஆன்மாவிற்குள்ளும் உலகம் வேறுபடுகின்றது. இவ்வளவு நுண்ணிய பிரகாசமான ஆத்மா நெற்றி புருவமத்தியில் இருந்து மூளைக்கு கட்டளை கொடுக்கின்றது.ஆன்மீகத்தில் தன்னை ஆன்மா என உணர்வதுதான் முதல் பயணம்.நான் கண்ணுக்கு புலனாகாத நுண்ணிய பிரகாசமான ஆத்மா. நான் இந்த உலகில் என்னை போன்றே பிரகாசமான ஆத்மாக்களுடன் வசித்து வருகின்றேன்.இப்படி
சிலஎண்ணங்களுடன் ஆன்மஉணர்வுடையவர்
தனது எண்ணங்களை சேமிப்பு செய்கின்றார்.
தனது எண்ணங்கள், சக்திகள், செயல்கள், வார்த்தைகள் எதுவும் வீணாகாமல் இருக்க ஆத்ம உணர்வு மிகவும் அவசியமாகின்றது.
தர்மம் என்பது உணவு, உடை, இருப்பிடம், செல்வம் இவற்றை கொடுப்பது மட்டுமன்று,
நம்பிக்கை இழந்தவருக்கு நம்பிக்கை கொடுப்பதும், பலம் இழந்தவருக்கு தைரியத்தை கொடுப்பதும்.வாழத்தெரியாத ஒருவருக்கு வழிகாட்டி வாழ்க்கையில் தீபத்தை ஏற்றுவதும் தர்மம்தான்.இதற்கெல்லாம் தலையாய தர்மம் எதுவென்றால் சுயதர்மம் எனும் ஆன்ம தர்மத்தில் நிலைத்திருப்பதே ஆகும்.கலியுக இறுதியில் வரும் சிவபரமாத்மாவும் ஆன்ம தர்மத்தையே உலகில் அனைவருக்கும் இன,மத பாகுபாடு இன்றி போதிக்கின்றார். வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment