ஒரு முறை ரஷ்ய அதிபர் ஸ்டாலின் ஒரு கோழியை நாடாளுமன்றத்துக்குள் கொண்டு வந்தார்.
அதன் இறகுகளை ஒவ்வொன்றாக பிடுங்கி கீழே போட்டார்.கோழி வலியால் கத்தியது துடிதுடித்தது முற்றிலும் பிடுங்கிய பின் அதை தூக்கி கீழே எறிந்துவிட்டார் பின்பு அதன் முன்னாள் சிறிது தானியத்தை தூவினார் அந்த கோழி அதை தின்று கொண்டு மெதுவாக நகர்ந்து வந்தது,மேலும் சிறிது தானியத்தை தனது காலடி வரை தூவினார் அதை பொறுக்கியபடி அந்த கோழி கடைசியில் அவர் காலடியில் வந்து நின்றது.
அப்போது ஸ்டாலின் கூறினார் இதுதான் அரசியல்,மக்களை எவ்வளவு வேண்டுமானாலும் கசக்கி பிழிந்து எடுத்து விட்டு கடைசியில் சிறிது தானியத்தை தூவினால் தம் காலடியில் வந்து கிடப்பார்கள் என்று கூறினார்.*
*அன்று ரஷ்ய பாராளுமன்றத்தில் ஸ்டாலின் கூறிய கூற்றை இதுவரை ஆண்ட மத்திய அரசும்,மாநில அரசுகளும் இந்தியாவில் உண்மைப்படுத்துகிறார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை தானே...
No comments:
Post a Comment