நேத்திக்கு ஒரு வீடியோ ஒன்றைப் பார்த்தேன். தமிழ்நாடு முழுக்க சாத்தான்கள்( கோவில்களில்) இருக்கறாங்க. , குறிப்பாக கும்பகோணத்தில அவ்வளவு சாத்தான்கள் இருக்கறாங்கன்னுபப்ளிக்காக பேசறார்..
"சிலரின்" தவறான பேச்சுக்களால், மத்த மதத்தினரில் உள்ள நட்புக்களை காயப்படுத்திடறாங்க.
மோகன். சி. லாசரஸ் அவர்களே, எனக்கு சில சந்தேகங்கள் இருக்கு.
விவரம் தெரிஞ்சு, நீங்க வளர்ந்து வந்த பாதையில், ஒரு இந்து சமயத்து மக்கள் உங்களுக்கு உதவியாக டாக்டராகவோ, கார் மெக்கானிக்காகவோ, எலக்ட்ரீசியனாகவோ, இருந்திருப்பார்கள் தானே.
அப்ப உங்க பாஷையில் கேட்கிறேன், சாத்தான்களைக் கும்பிடுவர்கள் சாத்தானாகத் தானே இருப்பார்கள். உங்களுக்கு எதற்கு அவர்களிடம் இருந்து உதவி??
நீங்கள் ஏசுநாதரைப் பற்றி போதிப்பவராக இருந்தால், நீங்கள் ஏசுநாதராக மட்டுமல்ல, அனைவரையுமே ஏசுநாதராக மாற்றி இருக்க வேண்டுமல்லவா.?.
அடுத்தவர்களை அசிங்கப்படுத்தி பேசு என்று எந்த மதத்திலும் இன்று வரை சொல்லப்படவில்லை.
எங்கள் கோவிலை சைத்தான் என்று சொல்லிக்கொண்டு, நீங்கள் தான் "சைக்கோவாக" மாறிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
நீங்கள் "அல்லேலுயா" என்று சொல்வது ஞாயம் என்றால்
நாங்கள் "ஆஞ்சநேயா" என்று சொல்வதில் உங்களுக்கென்ன ப்ரச்சனை?. சபையில் நாவடக்கம் இருக்கட்டும். திருந்துங்கள். இல்லை என்றால் திருத்தி விடுவார்கள்.
தன் வினை தன்னைச் சுடும். !!! .
No comments:
Post a Comment