குத்து விளக்கில் ஒரு முகத்தில் நெய் ஊற்றினாலும், அது தானாய் வழிந்து, அடுத்தடுத்த முகங்களுக்கும் சென்று சேர்க்கும்! அதே போல் நாமும் ஒரு குத்து விளக்கு தான்!
எப்போதோ ஒரு முறை இறைவனைச் சேவித்து விட்டு வந்தாலும், அந்த நெய்யானது அடுத்தடுத்த முகங்களுக்குத் தானாகவே ஓடணும்!
ஆலயம் அடிக்கடி செல்லாத மற்ற நேரத்திலும், அகம் என்னும் குத்து விளக்கில், கருணை ஜோதி தானே தெரியணும்! அதுவே குத்து விளக்கின் மங்கல மகத்துவம்!

தத்துவம் அன்று! = இது உனக்குத் தத்துவமே அன்று!
நீ புருஷகார பூதை அல்லவா! உன்னைப் பற்றித் தான் அவனைப் பற்றணும்! அப்படி தான் எங்கள் ஆச்சார்யர்கள் எங்களுக்குக் சொல்லிக் கொடுத்துள்ளனர்! அதை நீயே மீறலாமா தாயே?

ஸ்ரீ-மன்-நாராயண சரணெள, சரணம் ப்ரபத்யே!
ஸ்ரீ-மதே-நாரயணாய நமஹ!
ஸ்ரீ-மதே-நாரயணாய நமஹ!
ஸ்ரீ-யால்-கூடிய நாராயணன் திருவடிகளில் சரணம் அடைகின்றேன்!
ஸ்ரீ-யுடன்-நாராயணனே! எனதில்லை(ந+ம), எல்லாம் உனதே!
இது தான் தத்துவம்! இதை நாங்களும் பற்றுகிறோம்! நீயும் பற்று!

த்வயம் (துவயம்) என்பது உன் தத்துவம் அல்லவா? இரட்டைத் தத்துவம் என்ற பெயர் ஆச்சே அதற்கு! மந்திர ரத்தினம் என்பார்களே அதை!
ஆண்/பெண், சாதி/மதம், மொழி/இனம், குளித்தோ/குளிக்காமலோ...ஒரு துளி பேதம் கூட கிடையாதே அதுக்கு! யார் வேண்டுமானாலும், எப்போ வேண்டுமானாலும் மேற்சொன்ன துவய (இரட்டை) மந்திரத்தைச் சொல்லலாமே?

அதில் "ஸ்ரீ" சப்தத்தால் உன்னைத் தானே முதலில் துதிக்கின்றோம்?
* அவன் தலை மாட்டில் நீ இருந்தால், உன் மடியில் சுகமாகத் தூங்குவானே! ஆனால் அதையும் வேண்டாம் என்று, அவன் திருவடிக்கு அருகில் நீ அமர்ந்திருப்பது எதனால்?
* அந்தத் திருவடிகளை எங்களுக்குக் காட்டிக் கொடுக்கத் தானே?

No comments:
Post a Comment