1982-ம் ஆண்டு. மதுரையில் இருந்து திருச்செந்தூருக்கு நீதிகேட்டு நெடும் பயணம் என்ற பெயரில் புரட்சித் தலைவர் அரசுக்கு எதிராக கருணாநிதி நடைப் பயணம் சென்றார். அதுவும் எப்படி? தினமும் ஒரு குறிப்பிட்ட தூரம் சில கிலோ மீட்டர்கள் நடந்து போவார். மீண்டும் காரில் மதுரை திரும்பிவிடுவார். இரவு மதுரையில் தங்கிவிட்டு மறுநாள் விட்ட இடத்துக்கு காரில் சென்று நடைப் பயணத்தை தொடங்குவார். அவருடன் வந்த தொண்டர்கள்தான் பாவம்.
ஆனாலும், கருணாநிதி நடந்து போனதில் காலில் கொப்புளங்கள் ஏற்பட்டதாகவும் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது என்றும் செய்திகள் வந்தன. உடனே, கருணாநிதியை தொலைபேசியில் முதல்வர் புரட்சித் தலைவர் தொடர்பு கொண்டார். அவரது உடல் நிலை குறித்து பரிவோடு விசாரித்தார்.தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உடல் நலன் விசாரித்ததோடு நின்றால் கூட பரவாயில்லை. ஏதோ ஒரு மரியாதைக்காக பேசியிருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், அவர் செய்த காரியம்தான் அவரை மனித வடிவில் வந்த கருணை தெய்வம் என்று சொல்ல வைக்கும்.
கருணாநிதியின் உடல் நிலையை கவனிக்க சென்னையில் இருந்து டாக்டர்கள் குழுவை புரட்சித் தலைவர் அனுப்பி வைத்தார் நண்பர்களே.
தனது அரசை எதிர்த்து நடைப் பயணம் சென்று கொண்டு, தன்னையும் அந்த பயணத்தில் கடுமையாக விமர்சிக்கும் ஒருவரின் உடல் நலனில் அக்கறை கொண்டிருக்கிறார் என்றால் புரட்சித் தலைவர் சந்தேகமில்லாமல் மனித வடிவில் வந்த தெய்வம்தான். அப்படியும் அவரை விமர்சிப்பதை கருணாநிதி நிறுத்தவில்லை. என்ன செய்வது? தீய சக்திகள் இருந்தால்தானே தெய்வத்துக்கு மரியாதை.
நூற்றாண்டு விழா நாயகர் மனிதக் கடவுள் புரட்சித் தலைவர் புகழ் வாழ்க.
No comments:
Post a Comment