ஜனநாயக நிர்வாக அமைப்பில் ஆளுநர் பொறுப்பு ஏனைய மக்கள் பிரதிநிதிகள் போல் இல்லாமல் அரசியல் சாசன அடிப்படையில் மாநில நிர்வாகத் தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுபவர். மாநிலத்தில் நடைபெறும் அனைத்து விதமான நிர்வாகக் கடமைகளுக்கும் ஆளுநர் தான் பொறுப்பாவார். ஆனால் துரதிஸ்டவசமாக ஆளுநர் என்பது பொறுப்பற்ற ஒரு பொம்மை என்ற கருத்து நிலவி வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் பெண் பொம்மைகளுடன் களிப்பு வாழ்க்கை நடத்தும் ஒரு பொறுப்பாக இருந்து வருவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மாநில நிர்வாகத்தின் அனைத்து நடைமுறைகளுக்கும் முழு பொறுப்பு ஏற்க வேண்டிய ஆளுநர் அலுவலகம் கடமை மறந்த நிலையில் இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்கள் குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
தகவல் உரிமைச் சட்டப்படி மாநில தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையர்களால் நடத்தப்பட்டு வரும் முறைகேடுகளுக்காக ஆணையர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரம் வாய்ந்த ஒரே பொறுப்பு ஆளுநர் ஆகும். ஆனால் இந்த அடிப்படை கடமை ஆளுநரால் தட்டிக் கழிக்கப்பட்டு வருகிறது.
அரசுத் துறைகளில் நடைபெறும் நிர்வாக குறைபாடுகள் குறித்து புகார் அளித்தால் அதனை தவறு செய்யும் அந்த துறைக்கே அனுப்பி வைக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
தகவல் உரிமைச் சட்டத்தின் செயல்பாட்டினை கண்கானிக்க வேண்டிய ஆளுநர் அலுவலகம் தகவல் உரிமைச் சட்ட விண்ணப்பத்திற்கு உரிய பதில் வழங்க மறுத்துவருகிறது.
பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஆளுநர் அலுவலக அலுவலர்கள் பலர் மாறுதல் செய்யப்பட்டார்கள். திட்டமிட்டு நடைபெற்ற தவறுகளுக்கு இடம் மாறுதல் ஒரு தண்டனை ஆகாது. எனவே ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் நடவடிக்கையும் தொடரப்பட வேண்டும் என அனுப்பப்பட்ட முறையீடு ஆளுநரால் கண்டுகொள்ளப்படவில்லை.
இத்தைகய சூழ்நிலையில் தான் துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி கை மாறியதாக பொது நிகழச்சி ஒன்றில் தற்போதைய ஆளுநர் பிரகடனப்படுத்தினார். ஆனால் அதனை நம்பவில்லை என அறிவித்த அதே ஆளுநரே முறைகேடான நடவடிக்கைகளைத் தவிர்த்து 9 நபர்கள் திறமையின் அடிப்படையில் நேர்மையாக துணை வேந்தர்களாக நியமிக்கப்பட்டதாக அதே நிகழ்சியில் அறிவித்தார்.
பழைய தேர்வு முறை மாற்றப்பட்டு, நேர்மையான புதிய நடைமுறையில் நியமனம் நடைபெற்றது என்றும் ஆளுநர் அறிவித்தார்.
இதில் ஒரு பெரிய முரண்பாடு அடங்கியுள்ளது.
பல கோடிகள் கை மாறியது நமபத் தகுந்தது இல்லை என்றால் அதே பழைய நடைமுறை எதனால் கைவிடப்பட்டது.
புதிய நடைமுறை நேர்மையாக நடைபெற்றது என்றால் பழைய நடைமுறையில் நேர்மை கடைப் பிடிக்கவில்லை என்று தானே பொருட்ப்படும்.
இந்த முரண்பாட்டினை தெளிவு படுத்த முன் வராத ஆளுநர் மாறுபட்ட, வித்யாசமான, வேடிக்கையான, ஒரு விளக்கத்தினை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். கல்வியாளர்களால் தெரிவிக்கப்பட்ட தகவலை மேற்கண்ட நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டதாக தற்போதைய அறிக்கையில் உள்ளது. அரசியல் சாசன பொறுப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற தன்மையினை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது என்பதினை ஆளுநர் உணராமல் இருக்க வாய்ப்பில்லை.
அப்படியெனில் தற்போதைய அறிக்கையின் பின்னனி என்னவாக இருக்கும். இடமாறுதலில் அனுப்பப்பட்ட அலுவலர்களுக்கு பதிலாக ஆளுநரகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அலுவலர்களின் நடைமுறையிலும் நேர்மை வெளிப்படுவதாகத் தெரியவில்லை.
சில மாதங்களுக்கு முன் முதலமைச்சரால் ஒரு பொது நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட பேச்சில் கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதியதாக குறிப்பு தயார் செய்து கொடுத்த அதே தன்மையிலான உயர் மட்ட அலுவலர்கள் தான் நிர்வாக பொறுப்பில் பெருமளவில் இடம்பெற்றிருப்பது புலப்படுகிறது.
இத்தகைய அவலங்களுக்கெல்லாம் சிகரமாக இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 124 ஆளுநர் அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது தமிழகத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய களங்கம் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் அவமானமும் ஆகும்.
சட்டத்தின் இந்த பிரிவினை படித்து புரிந்துகொள்ளும் திறனற்றவர்கள் காவல் நிலையத்திற்கு கொடுக்கப்பட்ட புகாரை தயார் செய்தார்களா ?
அல்லது
எல்லா மட்டத்திலும் பேசப்பட்டு வரும் ஜனநாயகத்திற்கு எதிரான கொடுங்கோல் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறதா ?
என்பதை அரசியல் சாசன பொறுப்பு வகிக்கும் ஆளுநர் மட்டும் தான் தெளிவுபடுத்த முடியும்.
ஜனநாயக நிர்வாக அமைப்பில் ஆளுநருகும் மேலான அந்தஸ்த்தில் இருப்பவர்கள் பொது மக்கள் தான். எனவே அத்தகைய பொது மக்களுக்கு இந்த பிரச்சனை குறித்த தெளிவான விளக்கத்தை தெரிவிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஆளுநரை சாரும்.
தாமாக முன் வந்து இதற்கு உரிய தெளிவினை ஆளுநர் வெளிப்படைத் தன்மையுடன் வெளிப்படுத்த தயங்குவாரேயானால் அத்தகைய நபர் இந்த பொறுப்பில் தொடர்வது ஜனநாயக படுகொலையாக அமையும்.
இதில் விழிப்படைய வேண்டியவர்கள் பொது மக்களே. அரசியல் சாசனப் பிரிவு 51 A-வின் கீழ் தனது அடிப்படை கடமையை குடிமக்கள் நிறைவற்ற வேண்டிய கட்டாயம் நெருங்கி வருகிறது.
இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு.

No comments:
Post a Comment