Thursday, October 4, 2018

குருப்பெயர்ச்சி_என்றால்_என்ன?


#குரு பகவாவானுக்கும்..... #தட்சிணாமூர்த்தி பகவானுக்கும்.... உள்ள வேறுபாடு என்ன...???
குரு பெயர்ச்சி காலத்தில் யாரைப் பார்த்து வணங்க வேண்டும்...???
நவக்கிரக குருவையா...???
ஞானம் வழங்கும் குருவையா...???
என்பதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
அண்மைக் காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இவர் களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.
தட்சிணாமூர்த்தி பகவான் தான் குரு என நினைத்து கொண்டு தட்சிணாமூர்த்தி பகவானுக்கு பரிகாரம் செய்கிறார்கள்.
இதனால் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைந்து வருகிறது.
குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்தி பகவானுக்கு செய்வது சரிதானா...???
இவர்கள் இருவருக்கும் உள்ள வேறுபாடு என்ன?
தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள்.
அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் இறைவன்.
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்! அந்த நவக்கிரக
குருவுக்கும் நம் சிவபெருமானாகிய தட்சிணாமூர்த்தி குருவுக்கும் வேறுபாடு உண்டு.
நமது பரம்பொருளாகிய சிவபெருமான் தான் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி பகவான்
கைலாயத்தில் இருக்கும் பரம்பொருள் நமக்காக... இந்த மானிட உருவம் தாங்கிய மனிதர்களுக்காக... குரு தட்சிணாமூர்த்தி யாக
எழுந்தருளியிருப்பவர் தான், இந்த தென்னாடுடைய சிவன்.. இவரை குருவாக நினைத்து வழிபாடு செய்தாலே நாட்டில் இருக்கும் பரம்பொருளை வணங்கியதாக அர்த்தம் அதனால் தான்...
கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கு இறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத்தொடக்கை வெல்வாம்.
- பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடல் புராணம்.
இதன் பொருள் :
சனகர், சநந்தர், சநாதநர்,சநத்குமாரர் ஆகிய முனிவர்கள் நால்வரும்
நான்கு வேதங்களையும், ஆறு அங்கங்களையும் கற்றுக் கேள்வி அறிவும் வாய்க்கப் பெற்றவர்கள். அந்நால்வருக்கும் சிவபெருமான் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாகத் தெற்கு நோக்கி எழுந்தருளி இருந்து சின்முத்திரையால் - அறிவு அடையாளக் கையால் - பொருள் உண்மைகளை உணர்த்தியுள்ளார்.
சொல்லைக் கடந்த முழு முதற் பொருளாகவும் , வேதங்களைக் கடந்தும் அனைத்துப் பொருளாகியும் அவற்றின் வேராகியும் விளங்கும் சத்துப் பொருளை, அமர்ந்திருந்த நிலையிலேயே, வாய்மொழியால் எதனையும் உரைக்காமல், சின்முத்திரை யால் உண்மையை உணர்த்தி அருளினார்.
அந்த தென் முகக் கடவுளை வேறு எதனையும் நினைக்காமல் முழுமையாக நினைத்து வழிபட்டு பிறவிப் பிணியை நீக்குவோமாக....
"தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி "
என்று மாணிக்கவாசக பெருந்தகை போற்றி, திருவகலில் அருளியிருக்கிறார் என்றால் சிவபெருமானின் பெருங்கருணை தெரியவரும்.
குருப்பெயர்ச்சி என்பது நாம் வணங்கும் தென்னாடுடைய சிவனாக வீற்றிருக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்திக்கு இல்லை என்பதை மெய்யடியார்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இவர் ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு நமக்கு - சிவனடியார்களுக்கு மெய் ஞானத்தை கொடுத்து நம்மை பக்குவப்படுத்தி தன் வசம் வைத்துக் கொள்வதற்காக இருக்கும் கோலமே தட்சணாமூர்த்தி என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
குரு என்பது நவகோள்களில்... நவகிரகங்களில்... ஒன்று. இந்த குருதான் குருப்பெயர்ச்சி என்ற பெயரில் ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் ஒரு ஆண்டு க்கு ஒரு இராசி என சுற்றி வருகிறார். இவரும் சிவபெருமானை வணங்கித்தான் இந்த குருப்பெயர்ச்சி தொழிலை செய்து கொண்டிருக்கிறார்.
திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.
தென்முகக் கடவுள் என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி பகவானின் திசை தெற்கு...
நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு.
அதே போல தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.
வியாழனுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கொண்டைக் கடலை.
‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம்.
ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள்,
ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள்.
இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.
ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை.
வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி.
கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார்.
இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்.
அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ரஹஸ்பதி குரு
ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.
ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.
வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யாதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம்.
எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.
இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்?
ஞான குருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக்குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:
குருர்ப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குருர்தேவோ மஹேஸ்வர:l
குருஸ் ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஶ்ரீ குரவே நம:ll
இதன் பொருள் : குரு என்பவர் பிரம்ம தேவன்;
குரு என்பவர் மகேஸ்வரன்;
குரு என்பவர் அடிப்படை உண்மை யான பரம்பொருள்; அப்படிப்பட்ட குருவுக்கு என் நமஸ்காரம்.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.
- திருமூலர் - திருமந்திரம்
இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து *குரு பகவானும் தட்சிணாமூர்த்தி பகவானும்
இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். இந்த பாடல் கள் தட்சணாமூர்த்தி பகவானை குறித்து பாடப்பட்டது.
குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம்.
இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள்.
ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு.
இவர் களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான்.
குரு பார்க்க கோடி நன்மை
என்பது பழமொழி.
ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.
இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான்.
குரு பலம் இருந்தால் திருமணம் நடைபெறும்.
குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.
திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர்.
அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,
இனி வரும் வியாழகிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.
கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.
வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
வியாழக்கிழமைதான் என்றில்லை,
எந்த நாளிலும் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள்.
குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும்.
ஞான குரு வேறு,
நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள் வோம்.
இவைகளை எல்லாம் விடுத்து ஜோதிடர்களும்... ஊடகங்களும்... இந்த
கிரக பெயர்ச்சிகஞக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது மக்களை பண்படுத்தவா? பயம்காட்டவா?
அவரவர் ஜனன ஜாதகப்படி திசாபுத்தியில் சம்பந்தம் பெறாத குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி
சனி பெயர்ச்சி, ஆகிய இராசி பெயர்ச்சிகளால் பெருமளவிலான
எந்த விதமான பலன்களையும் வழங்குவதில்லை.
எனவே இந்த குரு பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி
சனி பெயர்ச்சி ஆகிய வைகளைக் கண்டு - பயம் கொள்ள வேண்டாம்.
Image may contain: 1 person, smiling
இந்த கோள்கள் யாருக்கு எத்தனை யாவது இடத்திற்கு இடம் மாறுகிறது என்பதை கண்டு உண்மையான உள்ளன்போடு சிவபெருமானை வழிபடுவோர்களுக்கு எந்த பெயர்ச்சியும் எந்த கெடுதலையும் கொடுத்து விட முடியாது
ஆகவே, மெய்யடியார்கள் இந்த குருப்பெயர்ச்சி தட்சணாமூர்த்திக்கு இல்லை என்பதையும் நவகோள்களில் ஒன்றான வியாழன் குருவுக்கு தான் இந்த குருப்பெயர்ச்சி என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மேஷம். மிதுனம். சிம்மம். கன்னி.விருச்சிகம். தனுசு. மகரம் ஆகிய ராசிகளுக்கு கெடுதலான இடத்திற்கு குரு வருகிறார்... எனவே கெடுதலையும் துன்பங்களையும் கொடுப்பவர். பரிகாரம் செய்துகொள்ளுங்கள்.ஒரு ராசிக்கு 1500ரூ எம்ஓ செய்யுங்கள் என்றெல்லாம் தொல்லைக்காட்சிகளில் விளம்பரங்கள் செய்கிறார்கள்...
எனவே மெய்யடியார்கள் எவரும் பரிகாரம் செய்ய வேண்டும் என்று எவரிடமும் ஏமாற வேண்டாம். ஏனென்றால் நமக்கு ஒரே கடவுள் பரம்பொருள் சிவபெருமான் ஒருவர் மட்டுமே ஆவார்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன் "
அவனே சிவன்...
ஆகவே பரிகாரம் செய்ய வேண்டும் என்று ஏமாற்று வேலை செய்பவர்களிடம் பணம் சம்பாதிக்கும் ஏமாற்று குணம் கொண்டவர்களிடம் போய் ஏமாற வேண்டாம்.
நமக்கு இந்த மனிதப்பிறவியை கொடுத்ததே சிவபெருமானை வாழ்த்தி வணங்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் நண்பர்களே...
இந்த குருப்பெயர்ச்சி மூலம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று சொல்லும் போலி வியாபாரிகளிடம் பரிகாரங்கள், ஹோமங்கள், என்று சொல்லி வாழ்க்கை நடத்தும் நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்று சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
ஏனென்றால் இன்று வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தும் கலி காலமாகும். எனவே சிவனின் பிள்ளைகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பல திருக்கோவில்களில் தட்சணாமூர்த்திக்கு கொண்டகடலை மாலையைப் போட்டு வழிபாடு செய்கிறார்கள். மேலும், பரிகார ஹோமங்களும், செய்கிறார்கள். இது முற்றிலும் தவறான செயலாகும். இதை மெய்யடியார்கள் உண்மையாக கண்டிக்க வேண்டும்.
தட்சிணாமூர்த்திக்கு ஏது குருப்பெயர்ச்சி என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டு இந்த பரிகார ஹோமங்கள் செய்பவர்களை கண்டிக்க வேண்டியது ஒவ்வொரு மெய்யடியார்களின் கடமையாகும்.
ஆகவே நாம் குருவருளை சிந்தித்து திருவருளை பெற வேண்டும் என்று மனம், மொழி, மெய்களால் வணங்கி வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி கொள்வோம்...!!!
திருச்சிற்றம்பலம்!
🙏🙏#ஓம்_நமசிவாய...!!! 🙏🙏
🙏🙏#அன்பே_சிவம்...!!!🙏🙏
...................................................................
❀❀❀❀••••🌿🍁🍁🌺🍁🍁🌿••••❀❀❀

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...