எஸ்.பி.ஐ., வங்கியை நல்ல தனியார் நிறுவனத்திடம் மோடிஜி ஒப்படைத்து விடுவது நல்லது. இன்னும் என்னதான் செய்வார் அவர்!!!
ஆறு மாதங்களில் எஸ்.பி.ஐ., வங்கியில்
ரூ.5,555 கோடி மோசடி
ரூ.5,555 கோடி மோசடி
எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கியில், ஆறு மாதங்களில், 5,555 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
SBI Bank fraud, SBI, Chandrasekhar Gaut, எஸ்பிஐ வங்கி மோசடி, பாரத ஸ்டேட் வங்கி மோசடி, அதிபர் விஜய் மல்லையா, வைர வியாபாரி நிரவ் மோடி , வங்கி பண மோசடி , சந்திரசேகர் கவுட், தகவல் உரிமை சட்டம், Bharat State Bank fraud, Vijay Mallya, Diamond Dealer Narendra Modi, Bank Fraud, Right to Information Act,
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த, தொழில் அதிபர் விஜய் மல்லையா, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த, வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர், பொதுத்துறை வங்கிகளில், பல ஆயிரம் கோடி ரூபாய்
கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றனர்.
இவர்கள் மீது, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கிகளில், கடந்த ஆறு மாதங்களில் நடந்த வங்கி பண மோசடி குறித்து, மத்திய பிரதேசத்தை சேர்ந்த, சந்திரசேகர் கவுட், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது கேள்விக்கு, வங்கியின் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 669 மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. இதன் மூலம், 723 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் நடந்த, 660 மோசடி சம்பவங்களில், 4,832 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எஸ்.பி.ஐ.,யில், ஆறு மாதங்களில், 5,555 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment