Wednesday, October 10, 2018

பனைமர நுங்கின் மருத்துவ நன்மைகள்..


1. நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து,
கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம்,
பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன.
2. நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி,உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.
3. நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும்.
இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.
4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.
5. சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும்.
6. ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
7. நுங்கு சாப்பிடுவதால் பெண்களுக்கு மார்பகப்
புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும் அளப்பரிய ஆற்றல் பெற்றதாகும்.
8. வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
9. நுங்கைச் சுற்றி இருக்கும் மேல் தோல் வயிற்றுக்கடுப்புக்கு நல்லது. கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, இது ஒரு அருமருந்து. கண்ணீல் தூசி விழுந்தாலோ சூட்டால் கண் எரிச்சலடைந்தாலோ நுங்கின் நீரை நேரடியாகக் கண்களில் உடைத்து ஊற்றுவது வழக்கம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...