Monday, October 1, 2018

மகாத்மா....

ராம் சரண் சூரத்தில் ஒரு பெரிய வைர வியாபாரி. அவனிடம் இல்லாத செல்வமே இல்லை, நிம்மதியைத் தவிர . " இறைவா!
நான் போன பிறவியில் என்ன பாவம் செய்தேன்? ஏன் எனக்கு இத்தகைய தண்டனை? " என்று கடவுளிடம் மனமுருக
வேண்டினான். அன்றிரவு அவன் கனவில் அசரீரியாய் ஒரு குரல். " ராம் சரண்! ஊருக்கு
வெளியே இராமர் கோவில் அருகே உள்ள மரத்தைப் பார். உனது பிரச்சினைக்கு விடை கிடைக்கும். ".
ஓட்டமும் நடையுமாக மரத்தை நோக்கி வரும் போது, மனம் ஒரு குற்ற உணர்ச்சியால் உந்தப்பட்டு கண்களில் நீர் பெருகியது.
மரம் காந்தி அடிகளாய்க் காட்சி தந்தது. ராம்
அழுத வண்ணம், " அண்ணலே நீங்கள் காந்தி என்றால் நான் யார்?.." என்றான். காந்தி அவன் தலையை அன்போடு தடவி, " நாதுராம் கோட்சே!
உனக்கு என்னைத் தெரியவில்லையா?" என்றார்.
" தங்களைக் கொலை செய்த பாவி நானா?
அதனால்தான் இப் பிறப்பில் எனக்கு நிம்மதி இல்லையா? எனக்கு மன்னிப்பே கிடையாதா?
மதப் பற்றாலும் தேசப் பறாறாலும் நான் செய்த
பாதகச் செயல்களை எப்படி எளிதாக எடுத்துக் கொண்டீர்கள்? புண்ணிய ஆத்மாவான தாங்கள் மரமாகவும், பாவ ஆத்மாவான என்னை செல்வந்தனாகவும் எவ்வாறு இறைவன் படைத்தான்? "என்று புலம்பினான்.
மகாத்மா.... இந்த உலகில் சிறந்த தாய் யார்?நாதுராம்.... என் தாய் தான்.
மகாத்மா......உன் நண்பரிடம் இதே கேள்வியைக்
கேட்டால் என்ன சொல்லுவான்?
நாதுராம்....அவன் தாய் என்று சொல்லுவான்..
மகாத்மா.......தாயின் விசயத்தில் இவ்வளவு பெரும் தன்மையுடன் இருக்கும் போது மத விசயத்தில் ஏன் இல்லை? நீ பிறந்த மதம் உனக்குத் தாய். அவன் பிறந்த மதம் அவனுக்குத் தாய். எல்லோரும் எந்த மத கலாச்சார சூழ்நிலையில் பிறக்கிறமோ, அதையே இறுக்கமாக பிடிக்கிறோம். என் கடவுள் பாவ மன்னிப்பு தருவார்; என் கடவுள் மறு பிறவி
இல்லாமல் செய்வார்: என் கடவுள் சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வார்...என்று
மூளைச் சலவை செய்து பக்தியை வியாபாரம்
செய்கிறார்கள். கடவுள் நம்முள்ளேதான்
இருக்கிறார்.
பிறவியிலேயே சிறந்த பிறவி ' மனிதப் பிறவி '
என்று சொன்னவன் மனிதன் தான். இந்த உலகம் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகத்தான் இறைவன் படைத்தான். ஆனால் ஓரறிவு படைத்த மரம் செடி கொடிகளெல்லாம் யாரிடமும் சென்று யாசகம் கேட்பதில்லை. யார் உணர்வையும் பறித்தது இல்லை.
அவைகளுக்கு கொடுக்க மட்டும் தான் தெரியும். எந்தப் பிறவி சிறந்தது சொல்? தெளிவோடு இரு. "
ராம் சரண் கனவு கலைந்தது. காந்தி மரம் போதி மரமானது.
இந்த நாள் இனிதாக வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...